மீண்டும் ஊரடங்கா..? நாளை முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Aug 19, 2021, 3:04 PM IST
Highlights

ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்  தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த மே மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2ம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பிறகு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு உத்தரவு தற்போது ஆகஸ்ட் 23ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில், திரையரங்கு திறப்பு, பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்  தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

click me!