
தேமுதிகவின் உட்கட்சி தேர்தல் இன்று தொடங்குகிறது என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தேமுதிகவின், 2017ம் ஆண்டு கட்சி அமைப்பு தேர்தல் இரண்டாம் கட்டமாக இன்று முதல் 15ம் தேதி வரை ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி வட்டம், பகுதி என கட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும்.
மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாட்டின் அனைத்து பேரூர், நகர, ஒன்றிய, மாநகராட்சியின் அனைத்து பகுதி, வட்டம் என கட்சி அமைப்பு தேர்தல் நடைபெறும்.
செயலாளர், அவைத் தலைவர், பொருளாளர், நான்கு துணை செயலாளர்கள், நான்கு மாவட்ட பிரதிநிதிகள், மாநகராட்சி வட்ட கட்சிக்கு நான்கு பகுதி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 3ம் கட்ட கட்சி அமைப்பு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.