உள்ளாட்சி தேர்தலில் அடித்து தூக்கும் திமுக...!! விடாமல் விரட்டும் அதிமுக... அமமுக, நாம்தமிழர்களுக்கு ஒரு இடம் கூட இல்லை...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 2, 2020, 11:53 AM IST
Highlights

மொத்தமுள்ள 515  மாவட்ட கவுன்சிலர் இடங்களில்,   திமுக 26 இடங்களிலும்  அதிமுக 16 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளன,   515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 37 இடங்களுக்கு தேர்தல் முன்னிலை நிலவரம் தெரிய வந்துள்ளது, 

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக  உள்ளாட்சி தேர்தலில்,  மாவட்ட கவுன்சிலர் , மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதிகளில் தொடர்ந்து திமுக முன்னிலை வகித்து வருகிறது... தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக  உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி தொடங்கி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு விளக்கம் மட்டும் கடந்த 27 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

அதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலின் இறுதி பட்டியலின்படி 18 ஆயிரத்து 570 பதவி இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  அதில் இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இந்நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில்  பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கியுள்ளது , இதற்காக 315 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கப்படவில்லை ஆனாலும் பல இடங்களில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது .  

அதில் ஒன்றிய கவுன்சிலர் களுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 20 இடங்களிலும் அதிமுக 15 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன,  மொத்தம் 5 ஆயிரத்து 67 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகள் உள்ளன. அதேபோல்,   மொத்தமுள்ள 515  மாவட்ட கவுன்சிலர் இடங்களில்,   திமுக 26 இடங்களிலும்  அதிமுக 16 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளன,   515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 37 இடங்களுக்கு தேர்தல் முன்னிலை நிலவரம் தெரிய வந்துள்ளது, இதில் தனித்துப் போட்டியிட்ட  நாம் தமிழர் கட்சி மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆகியோருக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!