உள்ளாட்சி தேர்தல்... வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!

By vinoth kumarFirst Published Jan 2, 2020, 11:32 AM IST
Highlights

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27 மற்றும் 30-ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 315 மையங்கள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் 35 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 8 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. இதில், வெற்றி பெற்றவர்களின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27 மற்றும் 30-ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 315 மையங்கள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் 35 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

வெற்றி பெற்றவர்கள் விவரம்

* ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளத்தூர் ஊராட்சி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஹேமலதா வெற்றி பெற்றுள்ளார்.

* தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாரியப்பன் 19 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

* தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் ரமேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

* நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டவர் வெற்றி பெற்றுள்ளார். 

* நாகை மாவட்டம் கடுவங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்யடியிட்ட தமிழ்த்தென்றல் 44 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

* திருவாரூர் மாவட்டம் மாவட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஷகிலா வீரமணி வெற்றி பெற்றுள்ளார். 

* நாமக்கல் புதுசத்திரம் 1-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மனோகரன் வெற்றி பெற்றுள்ளார். 

* திருச்செந்தூர் மூலக்கரை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பொன்செல்வி வெற்றி பெற்றார். 

* புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி மன்ற தேர்தலில் சுப்பிரமணியன் 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

* புதுக்கோட்டை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முருகேசன் 402 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி. 

* விருதுநகர் ஊராட்சி ஒன்றிய 1-வது வார்டில் திமுக வேட்பாளர் சோபனா ராஜி வெற்றி பெற்றுள்ளார். 

* நாகை மாவட்டம் கடக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கர்ணன் என்பவர் வெற்றி.

click me!