அட கடவுளே... குடும்பத்தில் 6 பேர்.. வேட்பாளருக்கு கிடைத்ததோ ஒரே ஒரு ஓட்டு.. பாஜகவின் பரிதாப நிலை..!

By vinoth kumarFirst Published Oct 12, 2021, 2:56 PM IST
Highlights

கார்த்திக் பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். கார்த்திக் உள்பட அவரது குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, 2 சகோதரர்கள் என 5 பேர் இருந்தும் காத்திக்கிற்கு ஒரு ஓட்டுதான் கிடைத்துள்ளது. 

குடும்பத்தில் 6 பேர் இருந்தும் பாஜகவை சேர்ந்த வேட்பாளருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகிறது. அந்த வகையில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அங்கு மொத்தம் 1,551 வாக்குகள் உள்ள நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அருள்ராஜே முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் திமுகவை சேர்ச்த அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகளையிம், பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் 1 வாக்கையும், தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

இந்நிலையில், கார்த்திக் பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். கார்த்திக் உள்பட அவரது குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, 2 சகோதரர்கள் என 5 பேர் இருந்தும் காத்திக்கிற்கு ஒரு ஓட்டுதான் கிடைத்துள்ளது. இதை பார்க்கும் போது அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களே அவருக்கு ஓட்டளிக்கவில்லை.

click me!