BREAKING: 9 மாவட்டங்களில் தொடங்கியது உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு… பலத்த பாதுகாப்பு

By manimegalai aFirst Published Oct 6, 2021, 7:14 AM IST
Highlights

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கி இருக்கிறது.

சென்னை:  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கி இருக்கிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி காலை 7 மணிக்கு 9 மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது. 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 76 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1577 கிராம ஊராட்சி தலைவர் பதவி, 12252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

பல மாவட்டங்களில் மழை பெய்த போதும் அதை பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

7 முனை போட்டி நிலவும் உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

click me!