விறுவிறுப்பாகும் உள்ளாட்சி தேர்தல் களம்… நாளை வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்

By manimegalai aFirst Published Sep 21, 2021, 9:08 AM IST
Highlights

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.

சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. புதியதாக உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து, அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக விடுபட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான அறிவிக்கையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அந்த 9 மாவட்டங்களிலும் கடந்த 15ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 5வது நாளான நேற்று வரை கிராம ஊராட்சி வார்டுகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட 24,027 பேர் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மட்டும் 6,864 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இது தவிர ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கு 2298 பேர், மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு 202 பேர் என மொத்தமாக 5 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 54 ஆயிரம் பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர். நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடியும் என்பதால் அதிகளவு மனுக்கள் நாளை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!