அப்பாடா..! பஞ்சாப் பஞ்சாயத்து முடிந்தது…! ரிலாக்ஸ் பண்ண சோனியா காந்தி போன இடம்

Published : Sep 21, 2021, 08:15 AM IST
அப்பாடா..! பஞ்சாப் பஞ்சாயத்து முடிந்தது…!  ரிலாக்ஸ் பண்ண சோனியா காந்தி போன இடம்

சுருக்கம்

பஞ்சாப்பில் நிகழ்ந்த அரசியல் நெருக்கடி முடிந்த நிலையில் ஓய்வெடுக்க சோனியா காந்தி சிம்லா சென்றிருக்கிறார்.

சிம்லா: பஞ்சாப்பில் நிகழ்ந்த அரசியல் நெருக்கடி முடிந்த நிலையில் ஓய்வெடுக்க சோனியா காந்தி சிம்லா சென்றிருக்கிறார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக இப்போதே தயாராகி வந்த காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் தாண்டவமாடியது. சித்துவுடன் மோதல், அம்ரீந்தர் ராஜினாமா, சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வர் என அனைத்து விவகாரங்களும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

இதையடுத்து, சில நாட்கள் ஓய்வுக்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சிம்லா சென்றிருக்கிறார். டெல்லியில் இருந்து சண்டிகருக்கு விமான பயணம்…. பின்னர் அங்கிருந்து கார் மூலம் சிம்லா சென்றிருக்கிறார் சோனியா காந்தி. அவருடன் பாதுகாப்பு படையும் உடன் சென்றிருக்கிறது.

சிம்லாவில் அவர் எங்கு தங்குவார் என்று கேட்பவர்களுக்கு ஒரு போனஸ் தகவல். அங்கு அவரது மகள் பிரியங்கா காந்தி பிரம்மாண்டமான அழகிய காட்டேஜ் ஒன்றை கட்டி இருக்கிறார். இயற்கை சூழலில் வனப்பகுதியில் சூபபரான 5 அறைகள் கொண்ட காட்டேஜ்.

கிட்டத்தட்ட எந்த வேலைப்பளுவும் இல்லாமல் சில நாட்கள் இங்கு ஓய்வெடுக்க இருக்கிறார் சோனியா காந்தி. மகள் பிரியங்கா காந்தி, கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒரு வாரம் முன்பே இங்கே வந்துவிட்டார். ராகுலும் வருவதால் சில நாட்கள் அமைதியாக தமது குடும்பத்துடன் சோனியா காந்தி நாட்களை கழிக்க இருக்கிறார்.

ஓய்வெடுக்க வந்துள்ள இந்த தருணத்தில் அவர் எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சி மற்றும் சந்திப்புகளுக்கும் அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல என்று டெல்லி திரும்ப உள்ளார் என்பது பற்றியும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

 

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Mothiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? தொடங்கியது கணக்கெடுப்பு..! பேரு குடுத்தாச்சா?
Rahul Gandhi: சாதி ரீதியான சர்ச்சை பேச்சு? ராகுல் காந்தி மீது பாய்ந்தது வழக்கு!