உள்ளாட்சித் தேர்தல் உதறல்..! பதற்றத்தில் ஸ்டாலின் டீம்..! நின்று விளையாடும் எடப்பாடி..!

By Selva KathirFirst Published Nov 16, 2019, 10:21 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேச ஆரம்பித்தார் மு.க.ஸ்டாலின். உள்ளாட்சித் தேர்தலை வேகமாக நடத்த வேண்டும் என்று அவர் அவ்வப்போது பேசிக் கொண்டே இருந்தார். ஆனால் எடப்பாடி தரப்பு உள்ளாட்சித் தேர்தல் குறித்து மூச்சு விடவில்லை. ஆனால் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அதிமுக தலைமை காட்டும் வேகம் திமுக தரப்பை உதறலுக்கு ஆளாக்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேச ஆரம்பித்தார் மு.க.ஸ்டாலின். உள்ளாட்சித் தேர்தலை வேகமாக நடத்த வேண்டும் என்று அவர் அவ்வப்போது பேசிக் கொண்டே இருந்தார். ஆனால் எடப்பாடி தரப்பு உள்ளாட்சித் தேர்தல் குறித்து மூச்சு விடவில்லை. ஆனால் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு அதிமுக தரப்பு உள்ளாட்சித் தேர்தலை தூக்கி தலையில் வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்டது. தேர்தலுக்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நேற்று உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகத்தையே ஒவ்வொரு மாவட்ட அதிமுகவும் ஒரு திருவிழாவை போல் கொண்டாடித் தீர்த்துவிட்டன.

அதிமுகவின் அனைத்து மாவட்ட கட்சி அலுவலகங்களும் ஜெக ஜோதியாக ஜொலித்தன. ஆனால் அதிமுகவிற்கு ஒரு நாளைக்கு முன்பாகவே திமுக தரப்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. ஆனால் விருப்ப மனுக்களை வாங்கத்தான் ஆட்களும் இல்லை. நிர்வாகிகளும் இந்த விஷயத்தில் பெரிய ஆர்வம் காட்டவில்லை.

அதே சமயம் திமுகவின் ஆர்எஸ் பாரதி அவசர அவசரமாக மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து மறுபடியும் உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக ஒரு மனுவை கொடுத்துவிட்டு வந்துள்ளார். அதாவது உள்ளாட்சித் தேர்தலுக்கு மறுபடியும் இடையூறு செய்யும் வேலையை திமுக தரப்பு தொடங்கியுள்ளது. தாங்கள் நேர்மையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த விரும்புகிறோம் நிறுத்த விரும்பவில்லை என்று ஸ்டாலின் இதற்கு விளக்கம் வேறு கொடுக்கிறார்.

ஆனால் உண்மையில் இடைத்தேர்தலை போல உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவின் தேர்தல் பணிகளுக்கு தங்களால் ஈடுகொடுக்க முடியாது என்பதை ஸ்டாலின் உணர்ந்து வைத்துள்ளார். எனவே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி எட்டாக்கனியாகிவிட்டால் தன்னுடைய தலைமை மீது மீண்டும் சந்தேகம் வந்துவிடும் என்பதால் இடைத்தேர்தல் உதறல் அவருக்கு வந்துவிட்டதாக பேசிக் கொள்கிறார்கள். அதனால் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமியை தமிழக அரசு மாற்ற தேர்தல் ஆணையர் பழனிசாமியை மாற்றவிட்டதாக அவசர அவசரமாக அதே சமயம் தவறாக ஒரு அறிக்கையை வெளியிட்டு தர்மசங்கடத்திற்கு ஆளானார் ஸ்டாலின்.

click me!