எப்போது ஜோதிடரானார்,5 வருஷம் ஸ்ட்ராங்க இருப்போம்: பட்னாவிஸை வெளுத்து வாங்கிய சரத் பவார்....

Published : Nov 16, 2019, 08:26 AM IST
எப்போது ஜோதிடரானார்,5 வருஷம் ஸ்ட்ராங்க இருப்போம்: பட்னாவிஸை வெளுத்து வாங்கிய சரத் பவார்....

சுருக்கம்

பாஜக தேவேந்திர பட்னாவி்ஸை எனக்குமுதல்வராகத்தான் தெரியும், அவர் எப்போது ஜோதிடராகமாறினார், எங்கள் கூட்டணி சீக்கிரம் கவிழாது, 5 ஆண்டுகள்வரை ஆட்சி செய்யும் என ேதசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்தார் .  

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை இல்லாததால் பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து, ஆளுநர் கோஷியாரி பரிந்துரையின் அடிப்படையில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மழையால் சேதமடைந்த பயிர்களைப் பார்வையிட நாக்பூர் மாவட்டத்துக்கு இன்று சென்றார்.
அப்போது நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:

''மகாராஷ்டிராவில் என்சிபி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி விரைவில் அமையும். இந்தக் கூட்டணி ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். இடைத்தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் வராது.


பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்பதெல்லாம் பொய். நாங்கள் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.. 

எங்கள் கூட்டணி குறைந்தபட்ச செயல் திட்டம் அடிப்படையில் செயலாற்றி வருகிறது. மாநிலத்தில் அரசு எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதற்கு வழிகாட்டும்.


எங்கள் கூட்டணி 6 மாதங்கள் வரை நீடிக்காது என்று பட்னாவிஸ் பேசியுள்ளார். எனக்கு பட்னாவிஸை முதல்வராகத் தெரியும். ஆனால், ஜோதிடராக எனக்குத் தெரியாது. எப்போது ஜோதிடராக மாறினார்” எனத் தெரிவித்தார்

இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!