உள்ளாட்சித் தேர்தல்..! கூட்டணி கட்சிகளுக்கு தாராளம் காட்டுங்கள்... மா.செக்களுக்கு அதிமுக மேலிடம் பிறப்பித்த உத்தரவு..!

By Selva KathirFirst Published Dec 4, 2019, 10:28 AM IST
Highlights

ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சியினர் விரும்பும் இடங்களை விட்டுக் கொடுக்க தயங்க வேண்டாம் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக தலைமையிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சியினர் விரும்பும் இடங்களை விட்டுக் கொடுக்க தயங்க வேண்டாம் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக தலைமையிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. மாறாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளான ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற கவுன்சிலர், ஒன்றிய குழு கவுன்சிலர், மாவட்ட குழு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற கவுன்சிலர் பதவிகள் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறாது.

ஆனால் ஒவ்வொரு ஊராட்சியிலும் திமுக மற்றும் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். இதே போல் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்களுக்கு சதவீத அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். உதாரணமாக கடந்த 2016 உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு திமுக 10 சதவீத இடங்களை ஒதுக்கியிருந்தது.

இதே போல் தற்போதும் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக மற்றும் தேமுதிகவிற்கு சதவீத அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள். வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக தலைமை கொடுத்துள்ள உத்தரவின் படி கூட்டணி கட்சிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் கணிசமான இடங்களை விட்டுக் கொடுக்க அதிமுக முன்வந்துள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் என அனைத்து பதவிகளிலும் கூட்டணி கட்சியினருக்கு சதவீத அடிப்படையில் இடங்கள் என்றும் ஒன்றிய குழு தலைவர், மாவட்ட குழு தலைவர் பதவிகளிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அதிமுக சம்மதித்துவிட்டதாம். எனவே தேர்தல் நடைபெற்றால் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கொண்டாட்டம் தான்.

click me!