திமுக எம்எல்ஏ வீட்டில் அதிரடி ரெய்டு !! ஜிஎஸ்டி கட்டாமல் மோசடி செய்தாரா ?

Published : Dec 04, 2019, 07:58 AM IST
திமுக எம்எல்ஏ வீட்டில் அதிரடி ரெய்டு !! ஜிஎஸ்டி கட்டாமல் மோசடி செய்தாரா ?

சுருக்கம்

செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தான் நடத்திவரும் நிறுவனத்தில் முறையாக ஜிஎஸ்டி கட்டவில்லை என எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  

செங்கல்பட்டு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வரலட்சுமி மதுசூதனன். இவரது இல்லம் மறைமலை நகரில் அமைந்துள்ளது. இந்த நிலையில் வரலட்சுமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று  மாலை சரக்கு மற்றும் சேவைப் பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை நடத்த ஆரம்பித்தனர். 

வரலட்சுமியின் கணவர்  நடத்திவரும் மேன் பவர் நிறுவனத்துக்கான ஜிஎஸ்டி வரியை முறையாகச் செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல கூடுவாஞ்சேரியிலுள்ள அலுவலகம், ஆப்பூரில் உள்ள வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமியின் கணவர் மதுசூதனன் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசனுக்கு மிகவும் நெருக்கமானவர்.  மதுசூதனன்தான்  மேன் பவர்  நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
 
இந்த நிறுவனமானது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மோட்டார் நிறுவனங்கள், ஐடி பூங்காக்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பணியாளர்களை அனுப்பி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்