உள்ளாட்சி தேர்தல் கெத்து காட்ட தயாராகும் தேமுதிக.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்..!

By vinoth kumarFirst Published Sep 19, 2021, 10:50 AM IST
Highlights

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. 

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள 9 மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால், அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக  விஜயகாந்த் அறிவித்தார். 

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ்,  திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கட்சியின் அவைத் தலைவர் வி.இளங்கோவன், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

click me!