கல்லா கட்டிய ஸ்டாலின் அரசு.. ஒரே நாளில் டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? சென்னையை அடிச்சு தூங்கிய தூங்கா நகரம்

Published : Jun 15, 2021, 09:44 AM IST
கல்லா கட்டிய ஸ்டாலின் அரசு.. ஒரே நாளில் டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? சென்னையை அடிச்சு தூங்கிய தூங்கா நகரம்

சுருக்கம்

27 மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக மதுரையில் 49.54 கோடிக்கு விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது. 2வது இடத்தில் உள்ள சென்னையில் 42.96 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.38.72 கோடிக்கும் என ரூ.164.87 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை.

டாஸ்மாக் திறக்கப்பட்ட 27 மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக மதுரையில் 49 கோடியும், சென்னையில் 42 கோடியும் விற்பனையாகியுள்ளது. 

கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால், அன்று முதல் மதுக்கடைகளும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கானது சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், கொரோனா பரவல் அதிகம் இல்லாத சென்னை உட்பட, 27 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. 

அதன்படி, வைரஸ் பரவல் அதிகமுள்ள கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1,650 மது கடைகள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இருக்கும் 3,600க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று காலை, 10 மணிக்கு திறக்கப்பட்டன. 35 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள்  உற்சாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

இந்நிலையில், 27 மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக மதுரையில் 49.54 கோடிக்கு விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது. 2வது இடத்தில் உள்ள சென்னையில் 42.96 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.38.72 கோடிக்கும் என ரூ.164.87 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!