ஆசிரமம் திறந்த இயக்குநர் லிங்குசாமி... நெகிழ்ந்து போன உதயநிதி ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published May 27, 2021, 12:42 PM IST
Highlights

மணப்பாக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமத்தின் தொடக்கவிழாவில், உதயநிதி ஸ்டாலின், தா.மோ. அன்பரசன் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

பிரபல திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றினை திறந்திருக்கிறார். பொதுவாகவே உதவும் குணம் கொண்ட மனிதநேயர் லிங்குசாமி, கொரோனா கொடுங்காலத்தில் தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்று நினைத்த லிங்குசாமி, சென்னை மணப்பாக்கத்தில் ஆசிரமன் ஒன்றினை திறந்துள்ளார்.

இதன் திறப்பு விழாவிற்கு உதயநிதி எம்.எல்.ஏ., நடிகை கீர்த்தி சுரேஷ், மற்றும் அன்பரசன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். திறப்பு விழாவிற்கு வருகை தந்த அத்துனை பேருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் லிங்குசாமி. கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி நேரத்தில் நோயின் தீவிரம் அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆறுதல் தரும்விதமாக கடந்த இரண்டு நாட்களாக நோய் தொற்று சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் , தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதியை அளித்து வருகின்றனர். இது கொரோனாவால் போராடும் நோயாளியின் சிகிச்சைக்கு பேருதவியாக உள்ளது. மணப்பாக்கத்தில் ஆசிரமம் இந்நிலையில், பிரபல இயக்குனர் லிங்குசாமி, கொரோனா நோயாளிகளுக்காக ஓர் ஆசிரமத்தைத் தொடங்கி உள்ளார். மணப்பாக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமத்தின் தொடக்கவிழாவில், உதயநிதி ஸ்டாலின், தா.மோ. அன்பரசன் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

CIPACA_Official உடன் இணைந்து ஹார்ட்ஃபுல்_நெஸ் ஏற்பாடு செய்த அம்கம்லேஷ்தாஜியின் ஆசிர்வாதத்துடன் இந்த ஆசிரமம் தொடங்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் லிங்குசாமி கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த மோசமான சூழ்நிலையில் இப்படி ஒரு ஆசிரமம் கட்டாயம் தேவையான ஒன்றாரும். சரியான நேரத்தில் இதை செய்த இயக்குனர் லிங்குசாமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 

click me!