47 குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி.. நெகிழ்ந்த உதயநிதி ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published May 27, 2021, 12:09 PM IST
Highlights

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 47 குழந்தைகளை நலத்துடன் மீட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்


.  

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 47 குழந்தைகளை நலத்துடன் மீட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில்  நேற்று இரவு இரண்டாவது மாடியில் ஏசியில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டு பின்னர் அதுசரி செய்யப்பட்டது. 

இதனை அடுத்து திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தன் தொகுதிக்குட்பட்ட மருத்துவமனை என்பதால் இன்று காலை தீ விபத்து நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்து சிகிச்சைக்காக மகப்பேறு மருத்துவத்திற்காக வந்தவர்களிடம் இது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையின் இயக்குனர் கலைச்செல்வி மற்றும் மருத்துவமனை அதிகாரிகள், தீயணைப்பு துறை, பொதுப்பணிதுறை, மின்சாரத்துறை அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அவர் ஆலோசனை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்; நேற்று இரவு ஏற்பட்ட மின்கசிவு விபத்து சரிசெய்யப்பட்டு பின்னர் குழந்தைகள் நலமுடன் மீட்கப்பட்டுள்ளதற்கு முதலில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், நேற்று நடந்த சம்பவத்தை குறித்து ஆய்வு செய்வதற்காகவும் இதுபோன்று தீவிபத்து நடைபெறாமல் இருப்பதற்காவும், பொதுப்பணித் துறை மின்சாரத் துறை தீயணைப்புத்துறையினர் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்றார். கூட்டத்தில் மீண்டும் இதுகோன்று ஒரு விபத்து  நடைபெறாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

click me!