பீர் பாட்டில் டோர் டெலிவரி.. சொமேடோ ஊழியர் கைது..?

By Ezhilarasan BabuFirst Published May 27, 2021, 12:34 PM IST
Highlights

இந்த நிலையில் நேற்று மாலை நியூ ஆவடி சாலை கே.ஜி ரோடு சந்திப்பில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

சென்னையில் மதுபான பாட்டிலை டோர் டெலிவரி செய்து வந்த சொமேடோ ஊழியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து 10 மதுபான பாட்டிலும் பாட்டிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடபட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி  சில விஷமிகள் கள்ளச் சந்தையில் மதுபானத்தை விற்பனை செய்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது. 

இந்த நிலையில் நேற்று மாலை நியூ ஆவடி சாலை கே.ஜி ரோடு சந்திப்பில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சொமேடோ பனியன் அணிந்து வந்த நபரை பிடித்து அடையாள அட்டை குறித்து கேட்டபோது அவர் முன்னும் பின்னுமாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அந்த ஊழியர் கொண்டு செல்லும் உணவு பெட்டியில் பார்த்த போது 10 பீர் பாட்டில்கள் இருந்தது. இதையடுத்து பீர் பாட்டிலை பறிமுதல் செய்து அந்த நபரை கைதுசெய்து விசாரணை நடத்தினர். 

விசாரணயில் அந்த நபர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ்(32) என்பது தெரியவந்தது. ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் நபர்களுக்கு வீட்டை தேடி மதுபானம் டோர் டெலிவரி செய்து வந்ததும் தெரியவந்தது. உணவு கொடுப்பது போல் எடுத்து சென்றால் காவல் துறையினர் யாரும் சோதனை செய்யமாட்டார்கள் என எண்ணி சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து டி.பி சத்திரம் காவல் துறையினர் பிரசன்ன வெங்கடேஷ் மீது வழக்குபதிவு செய்து எழுதி வாங்கி கொண்டு ஜாமீனில் விடுவித்தனர்.
 

click me!