
சேலம் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி தலைவராக இருப்பவர் கோட்டை N. பாபு.
ஜெயாலலிதாவின் தீவிர விசுவாசியான இவர் அவரது மறைவுக்கு பிறகு தற்போதய அதிமுக தலைமைக்கு எதிராக தொடர் போர்க்கொடி தூக்கி வருகிறார்.
ஜெ. மறைந்த அன்றே சேலம் மாநகர் முழுவதும் ஜெ. சாவில் மர்மம் இருப்பதாக கூறி போஸ்டர்கள் ஒட்டினார்.
அன்றிலிருந்து தொடர்ந்து 16வது நாளாக பல்வேறு விதங்களில் தற்போதைய அதிமுக தலைமைக்கு எதிராக எதிர்ப்பை காட்டி வருகிறார்.
சேலத்தை பொறுத்தவரை மூத்த அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி கையில்தான் மொத்த கட்டுப்பாடும் உள்ளது.அவரை எதிர்த்து அங்கு எதுவும் செய்யமுடியாது.
சேலம் அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலோனோர் சின்னம்மா சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் எம்ஜிஆர் இளைஞரணி தலைவர் கோட்டை N. பாபு மட்டும் எதிர்க்குரல் எழுப்பி வருகிறார்.
தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு மூன்றின் படி ஜெயலலிதா மரணம் குறித்த முழு தகவலையும் அறிவதற்காக தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அப்போல்லோ மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதி ஜெயலலிதா இறப்பில் மர்மம் உள்ளதாகவும், அவற்றை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தாலும் கோட்டை பாபு போன்ற சிலரால் தொடர்ந்து மாவட்ட அதிமுகவுக்கு குடைச்சல் ஏற்பட்டுள்ளது.