"சசிகலா எனும் நான்..." - பதவியேற்கும் போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

 
Published : Dec 22, 2016, 03:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
"சசிகலா எனும் நான்..." - பதவியேற்கும் போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

சுருக்கம்

தமிழகம் முழுவதும் வருமானவரி துறை ரெய்டு, சிபிஐயின் கைது என மத்திய அரசு பட்டையை கிளப்பி சூட்டை கிளப்பி கொண்டிருக்கும் வேளையிலும் மதுரை மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள் தங்கள் இஷ்டத்துக்கு கலக்கி வருகின்றனர்.

அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒவ்வொரு காட்சிகளும் திக் திக் என அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக ஜெ.வின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா அதிமுக தலைமைக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறார் .

மேலும் தமிழகத்தின் பல இடங்கள்லும் சசிகலாவின் போஸ்டர் மற்றும் பேனர்களை தொண்டர்கள் கிழித்து வருவது கண்கூடாக பார்க்க முடிகிறது.

மேலும் சாணத்தை அடித்தும் கருப்பு மை பூசியும் வருகின்றனர் தொண்டர்கள்.

நாடே அதகளமாகி இருந்தாலும் மதுரைக்காரர்கள் மட்டும் என்றைக்குமே ஸ்பெஷல் தான்.

சசிகலா முதலில் பொதுசெயலாளராக பதவியேற்க வேண்டும் என்ற நிர்வாகிகளின் கோரிக்கையே இன்னும் ஒரு வடிவத்துக்கு வராத நிலையில் சசிகலா முதல்வராக பதவியேற்பது போல போஸ்டர்கள் மதுரையை கலக்கி வருகின்றன.

மதுரை ஐயர் பங்களாவை சேர்ந்த போஸ் என்னும் அதிமுக நிர்வாகி இந்த போஸ்டர்களை அச்சடித்து மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ளார்.

சசிகலாவின் போஸ்டர்களுக்கு பல இடங்களில் எதிர்ப்பு வலுக்கும் நிலையில் ஆதரவு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுதான் வருகிறது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு