திமுக - அதிமுகவுக்கு ஜால்ரா அடிக்காதவர் கிரிஜா..!! - தலையெழுத்து மாறுமா?

First Published Dec 22, 2016, 1:27 PM IST
Highlights


அரசியவாதிகளையே அள்ளி சாப்பிடும் அளவுக்கு ஜால்ராக்களாக அதிகாரிகள் மாறிவிட்டது மறுக்கமுடியாத மறைக்கமுடியாத உண்மையாக மாறிவிட்டது.

வடமாநிலங்களை போல செருப்பை எடுத்து வைப்பது ஏறி நிற்கும் ஸ்டூலை தாங்கி பிடிப்பது கார் கதவை திறந்து விடுவது போன்ற மோசமான வேலைகள் தமிழகத்தில் இல்லையென்றாலும் அரசியல்வாதிகளை விட மோசமான ஊழல் மற்றும் கூட்டுச்சதிகளில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துள்ளது.

அதிகாரிகள் இந்த அளவிற்கு ஊழலில் திளைக்கவும் பணப்பேய் எனும் பேராசை பிடித்து ஆடவும் சுயநலம் மிக்க அரசியல்வாதிகள் தான் காரணம்.

எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும் தங்கள் சுயலாபத்துக்கு வளைந்து கொடுக்கும் அல்லது ஜால்ரா போடும் அதிகாரிகளையே விரும்புகின்றனர்.

மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்ய நினைக்கும் அதிகாரிகள் ஜால்ராவும் போடுவதில்லை வளைந்தும் கொடுப்பதில்லை

ஆனால் அரசியல்வாதிகளுக்கு இணையாக ஊழல் செய்ய நினைக்கும் அதிகாரிகளோ தரை டிக்கட் ரேஞ்சுக்கு தங்களை தகுதி இறக்கம் செய்து கொள்கின்றனர்.

தற்போது தெரிந்தோ தெரியாமலோ ஒரு புதிய தலைமை செயலாளர் கிடைத்துள்ளார்.இதில் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால் பழைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் போன்று முழு நேர கட்சி ஊழியர் போல எந்த கட்சிக்கும் ஆதரவாக இல்லாதவர் கிரிஜா என்பது தான் ஆறுதல்

பணியில் சேர்ந்த 1981 முதல் இன்று வரை கிரிஜா வைத்யநாதன் எந்த கட்சி தலைமையுடனும் நெருக்கம் பாராட்டாமல் இருந்து வந்துள்ளார்.

1959 தஞ்சையில் பிறந்த கிரிஜா நன்றாக படித்து இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான ஐஐடியில் பட்டம் பெற்றவர்.

2019 வரை பதவியில் நீடிக்கவுள்ள கிரிஜா வைத்யநாதன் நலவாழ்வு மற்றும் பொருளாதாரம் என்ற தலைப்பில் முனைவர் டாக்டர் பட்டம் பெற்றவர்.

மதுரை மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த போது மாவட்ட மக்களிடம் நன்மதிப்பை பெற்றவராக இருந்தார்

சுகாதாரத்துறையில் தொடர்ந்து 15 ஆண்டுகள் செயலாளராக பணியற்றியுள்ளார்.

திமுக, அதிமுக இரு கட்சிகளுடனும் வேலை செய்த அனுபவம் இருந்தாலும் யாருக்கும் ஜால்ரா அடிக்காமல் தனது டிக்னிட்டியை விட்டு கொடுக்காமல் இருந்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் தமிழக அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம் இதுபோன்ற ஊழல் கறைபடியாத தொடர்ந்து பதவி முடியும் வரை ஊழல் செய்யாத உயரதிகாரிகளைதான்.

மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வாரா கிரிஜா வைத்யநாதன்???

பொறுத்திருந்து பார்க்கலாம்....

click me!