கொரோனா எதிரான போரில் வெல்வோம் என்பதில் ஐயமில்லை.. கர்ஜித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumarFirst Published Jun 7, 2020, 6:45 PM IST
Highlights

கொரோனா வைரஸ் இயல்பு  வாழ்க்கை, பொருளாதாரத்தை பாதித்துள்ளது.  கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் இயல்பு  வாழ்க்கை, பொருளாதாரத்தை பாதித்துள்ளது.  கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- பல தலைமுறைகளாக பல்வேறு சவால்களை சந்தித்து வெற்றி பெற்றவர்கள் தமிழர்கள் என்றார். 

*  இயற்கை சீற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வளர்ச்சி பாதையில் தமிழகத்தை அழைத்து சென்றோம் என்றார்.

* பொதுமுடக்கம் அறிவித்ததில் இருந்து வீட்டிற்குள்ளேயே இருந்து ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு பாராட்டு

* டாக்டர்கள் உள்பட முன்கள பணியாளர்களின் பணிகள் அளப்பரியது

* கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகம் கிடையாது

* இயல்பு வாழ்க்கையுடன் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.

* புயல் மற்றும் சுனாமியை பாதிப்பை சிறப்பாக எதிர்கொண்டோம்.

* கொரோனா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

* தினசரி 13 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

* பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லை.

* குணமடைவோர் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம்.

* பயிர்க்கடன், கூட்டுறவுக்கடன்களை கட்ட காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

* 35.65 தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

* மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை எனில் கொரோனவை கட்டுப்படுத்துவது சாத்தியம் இல்லை.

*  பொருளாதார பாதிப்பை தவிர்க்க முழு ஒத்துழைப்பு தேவை.

17 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது 

*  மலைவாழ் மக்கள், தூய்மை பணியாளர்கள் என 14 நலவாழ்வு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம்

*  பேரிடராக அறிவித்து 4,830 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம் 

* மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை நியமித்துள்ளோம்

* சுமார் 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது

*  கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது

*  தமிழகத்தில் 6 லட்சம் பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன.

* ஊரடங்கு காலத்தில் விவசாயம், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு தடை விதிக்கவில்லை.

*விளை பொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம்.

click me!