குடிமகன்களுக்கு குஷியான செய்தி... குறைந்தது மதுபான விலை.. கூடுதல் கொரோனா வரியை திரும்ப பெற்றார் முதல்வர்..!

By vinoth kumarFirst Published Jun 7, 2020, 3:04 PM IST
Highlights

டெல்லியில் நாளை முதல் உணவகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

டெல்லியில் நாளை முதல் உணவகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.46 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில் தேசிய தலைநகர் டெல்லியில் நாள் தோறும் 1000க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 27,000 தாண்டியுள்ளது. இதனிடையே, கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லையென்ற புகார்கள் எழுந்துள்ளன. 

இந்நிலையில், அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில், டெல்லியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே படுக்கைகள் ஒதுக்கப்படும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தெரிவித்துள்ளார். நாளை முதல் மூடப்பட்டிருந்த டெல்லியின் எல்லைகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  நாளை முதல் உணவகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட  70 சதவீத கொரோனா வரி அரசாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

வரி மோசடிகள் அதிகரிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பை அடுத்து டெல்லி அரசாங்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கிடைக்கும் மதுபான விலைகள் கனிசமாக குறையும் எனவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

click me!