பிராமணர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுறாங்க.. கதறும் ராம சுப்ரமணியன்.

By Ezhilarasan BabuFirst Published Mar 5, 2022, 12:09 PM IST
Highlights

இதேபோல் மேற்கு மாம்பலத்தில் வெற்றிபெற்றுள்ள உமா ஆனந்தன் பாஜகதான் நமக்கு வாழ்வு கொடுக்கும் கட்சி என பேசுகிறார். ஆனால் அது முற்றிலும் தவறான விஷயம். பாஜக ஒன்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரிய நல்லது செய்து விடவில்லை, திமுக ஒன்றும் பிராமணர்களுக்கு கெடுதல் செய்துவிடவில்லை. 

தான் ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசுவதால் தனக்கு சில பிராமணர்களும், பாஜகவினரும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என அரசியல் திறனாய்வாளர் பாஜகவின் முன்னாள் உறுப்பினருமான ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ்சின் தீவிர பக்தராக விளங்குபவர் ராமசுப்ரமணியன். இவர் பாஜகவில் தீவிர பற்றாளராகவும், ஊடக விவாதங்களில் பாஜகவுக்கு ஆதரவாகவும், மோடிக்கு ஆதரவாகவும் பேசி வந்தவர்தான் ராமசுப்பிரமணியன். அரசியல் விமர்சகர், மோடி ஆதரவாளர், வளதுசாரி சிந்தனையாளர், பொருளாதார நிபுணர் என பல முகங்கள் இவருக்கு உண்டு. ராமசுப்பிரமணியன் என்றாலே அவர் பாஜகவின் முகமாகவே அறியப்பட்டார். ஆனால் பாஜகவின் தனக்கு முக்கியத்துவம் இல்லை என குறி திடீரென கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவின் சார்பில் விவாதங்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

ஒருகட்டத்தில் பாஜகவை விமர்சித்தும் பேசத் தொடங்கினார். தற்போது நேரெதிராக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஆனாலும் அடிக்கடி பாஜகவுக்கு அட்வைஸ் கூறும் வகையில் அவர் விவாதங்களில் கருத்துகூறி வருகிறார். தற்போது நான் பாஜகவில் இல்லாவிட்டாலும் கூட பல ஆண்டுகள் அந்தக் காட்சியில் பயணித்தவன் என்ற அடிப்படையில் அந்த கட்சி தமிழகத்தில் வளர்ந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். ஆனால் பாஜகவினர் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறோம் என்ற பெயரில் கண்மூடித்தனமாக ஆள்சேர்ப்பு நடத்திவருகின்றனர். கட்சியில் சேர வருபவர்கள் யார். அவருடைய பின்புலம் என்ன என்பதை எல்லாம் ஆராய்வதே இல்லை. குறிப்பாக காலிப் பயல்களையும், ரவுடிகளையும், கொலைகாரர்களையும் கட்சியில் சேர்த்து வருகின்றனர். இது மிகப் பெரிய பிரச்சினையை உருவாக்கும்.

 

பாஜக நாளடைவில் ரவுடிகளின் கூடாரமாக மாறி விடும் எனவும் அவர் எச்சரித்து வருகிறார். இந்நிலையில் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அண்ணா அறிவாலயத்தில் அவரை நேரில் சந்தித்தார் ராமசுப்ரமணியன். அதற்கான புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலானது. அப்போது பாஜகவினர், பல வலதுசாரி சிந்தனையாளர்கள் ராமசுப்பிரமணியனை கடுமையாக விமர்சித்தனர். இதைத்தொடர்ந்து தற்போது அறநிலைத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முழுக்க முழுக்க திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களிலும் பேசி வருகிறார். இதனால் பல பிராமணர்கள் தனக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், முதல்வரும் திமுகவும் செய்து வரும் பல நல்ல விஷயங்கள் எனக்கு பிடித்திருக்கிறது. எந்த சாதி மத வேறுபாடுகளின்றி அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்பவராக முதல்வர் இருக்கிறார். அதனால் நான் அவரை ஆதரித்து பேசுகிறேன், இதில் என்ன தவறு இருக்கிறது. இதனால் பிராமண சமூகத்தில் இருந்து நான் கடுமையான விமர்சனத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. முகம் தெரியாத பலரும் எனக்கு தொலைபேசியில் அழைத்து மிக மோசமான வார்த்தைகளில் பேசி வருகின்றனர். என் குடும்பத்தினருக்கு சாபம் விடுகின்றனர். இப்படிப் பேசுபவர்கள் அவர்கள் செய்வது நியாயமா என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். எல்லா நேரத்திலும் திமுகவை எதிரியாகவே பார்ப்பது சரியல்ல. ஒருகட்டத்தில் தங்களைத் தாங்களே இவர்கள் தனிமைப்படுத்திகொள்கின்றனர். 

இதேபோல் மேற்கு மாம்பலத்தில் வெற்றிபெற்றுள்ள உமா ஆனந்தன் பாஜகதான் நமக்கு வாழ்வு கொடுக்கும் கட்சி என பேசுகிறார். ஆனால் அது முற்றிலும் தவறான விஷயம். பாஜக ஒன்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரிய நல்லது செய்து விடவில்லை, திமுக ஒன்றும் பிராமணர்களுக்கு கெடுதல் செய்துவிடவில்லை. உமா ஆனந்தன் எந்த விவாதத்திலும் வெறுப்புப் பிரச்சாரம் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அது நல்லது அல்ல. தொடர்ந்து இப்படி பேசுபவர்கள் திமுக யார் தலையில் மண்ணை வாரி போட்டது என்பதை சொல்ல வேண்டும்.? பிராமணர் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் மழை காலத்தில், கொரோனா நேரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் ஏராளமான உதவிகளை செய்தார். ஏன் அதையெல்லாம் இவர்கள் பாராட்ட மறுக்கிறார்கள். பாராட்ட மனம் இல்லாமல் தொடர்ந்து திமுகவை விமர்சிக்கிறார்கள்.  திமுக செய்யும் நன்மைகளை பாராட்ட விட்டாலும் பரவாயில்லை விமர்சிக்காமல் இருந்தால் நல்லது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!