இத்தோட முடியட்டும்... பாமக ராமதாஸ் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Jun 27, 2020, 12:14 PM IST
Highlights

கொரோனா காலத்தில் ஊடகத்துறையின் களப்பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுளார்.

கொரோனா காலத்தில் ஊடகத்துறையின் களப்பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுளார்.

இதுகுறித்து அவர், ‘’இந்தியாவில் 500 புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முடிவை ஐ.நா. கடுமையாக விமர்சித்திருக்கிறது. புதிய நிலக்கரி சுரங்கங்கள் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும்; புவி வெப்பமயமாதலை விரைவு படுத்தும். ஆகவே, அந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
 
மக்கள்தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி ஆகியவற்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன் கொரோனா வைரஸ் தாக்குதலால் இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும். கொரோனா காலத்தில் ஊடகத்துறையின் களப்பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஊடகத்துறை உயிரிழப்பு வேல்முருகனோடு முடியட்டும். ஊடகத்துறையினர் அனைவரும் இரு மடங்கு பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார்.

click me!