ஆதினத்தை அண்ணாமலை தோளில் சுமக்கட்டும்.. உழைக்கும் மக்கள் சுமப்பதை ஏற்க முடியாது.. திருமாவளவன் பொளேர்.!

By Asianet Tamil  |  First Published May 6, 2022, 8:38 AM IST

நரேந்திர மோடிக்கு நேர் எதிர் சிந்தாந்தத்தைக் கொண்ட தலைவர் அம்பேத்கர். தலித்துகளும் பழங்குடிகளும் இந்துக்களே இல்லை என்கிறார் அம்பேத்கர். இதற்கு பாஜகவின் பதில் என்ன? 
 


இசைஞானி இளையராஜாவுக்குப் பின்னால் சங்கப்பரிவார்கள் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில், மரபு சார்ந்த அடிப்படையில், ஒருவரை உழைக்கும் மக்கள் தோளில் சுமப்பது என்பது ஏற்புடையது அல்ல. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விருப்பப்பட்டால் அவர் வேண்டுமானால் தோளில் சுமக்கட்டும். விசாரணைக் கைதி விக்னேஷ் உள்பட 3 மரணங்களில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதுபோன்ற மரணங்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.

Tap to resize

Latest Videos

இதுபோன்ற மரணங்கள் இனி நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இதற்கென தனியாக விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். இசைஞானி இளையராஜாவுக்கு பின்னால் சங்கப்பரிவார்கள் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இசைஞானி மீதும் அவர் சகோதரர் மீதும் நான் மிகவும் பரிதாபப்படுகிறேன். அபேத்கரை ஒப்பிடலாம். ஆனால், யாரோடு ஒப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். நரேந்திர மோடிக்கு நேர் எதிர் சிந்தாந்தத்தைக் கொண்ட தலைவர் அம்பேத்கர். தலித்துகளும் பழங்குடிகளும் இந்துக்களே இல்லை என்கிறார் அம்பேத்கர். இதற்கு பாஜகவின் பதில் என்ன? 

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியதை வரவேற்கிறோம். ஆனால், இந்த மசோதாவுக்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைக்குமா? அதற்கு எவ்வளவு காலம் ஆகும் போன்றவை தெரியவில்லை” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

click me!