சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதிமாறன், கலாநிதிமாறன், கே.என்.நேரு, துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்டவர்களின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட்டார்.
அண்ணாமலை பேட்டி பட்டிமன்ற பேச்சை போல சிரிப்பை வரவழைக்கும் வகையில் தான் இருந்தது என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதிமாறன், கலாநிதிமாறன், கே.என்.நேரு, துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்டவர்களின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க;- ரஃபேர் வாட்ச் மர்மத்தை உடைத்த அண்ணாமலை.. வீட்டு வாடகையே நண்பர்கள்தான் தருகிறார்கள்..
அண்ணாமலை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி;- அண்ணாமலையின் அறியாமையை பார்க்கும்போது அவர் எப்படி ஐபிஎஸ் தேர்வு எழுதி தேர்வானார் என்பது தெரியவில்லை. அண்ணாமலை யார் யார் மீது குற்றம் சாட்டியிருக்கிறாரோ அவர்கள் அனைவருமே தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டியது தேர்தல் விதி.
அண்ணாமலைக்கு உண்மையை சொல்லி பழக்கமில்லை. யார் யார் சேர்த்ததாக அண்ணாமலை புகார் கூறினாரோ அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான பில் என்று கூறி சீட்டு ஒன்றை அண்ணாமலை காட்டியிருக்கிறார். ரசீது என்பது வேறு சீட்டு என்பது வேறு என ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார். மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக் கூடிய அமைப்புகள் எல்லாம் பிரதமர், அமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
இதையும் படிங்க;- திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து? விவரம் இதோ.!
ஆருத்ரா நிர்வாகியிடம் பல கோடி ரூபாயை நேரடியாக அண்ணாமலை பெற்றிருக்கிறார் என்று புகார் எழுந்துள்ளது. அண்ணாமலை தன் மீதான குற்றச்சாட்டை திசை திருப்புவதற்காக நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் அண்ணாமலை நிச்சயம் சிறைக்கு செல்வார்.
திமுகவின் சொத்து என்று அண்ணாமலை கூறியது தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் அவர் ஒப்படைக்க வேண்டும். திமுக பள்ளிகள் நடத்துவதாக கூறிய அண்ணாமலை அதற்கான ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும். 15 நாட்களுக்குள் ஆதாரங்களை ஒப்படைக்காவிட்டால் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அண்ணாமலை மீதுது வழக்கு தொடருவதில் மிக உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.