ரஃபேர் வாட்ச் மர்மத்தை உடைத்த அண்ணாமலை.. வீட்டு வாடகையே நண்பர்கள்தான் தருகிறார்கள்..

By vinoth kumar  |  First Published Apr 14, 2023, 11:20 AM IST

நான் கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரத்தை பெல் அண்ட் ரோஸ் எனும் நிறுவனம் ரஃபேல் விமானத்தை தயாரித்த டசால்ட் ஏவியேஷன் எனும் பிரெஞ்சு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ளது. 


பாஜக தலைவர் அண்ணாமலையின் ராஃபேல் வாட்ச்சை சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் ரூ. 3 லட்சத்திற்கு வாங்கியதாக கூறியுள்ளார். 

கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து வரும் அண்ணாமலை ரஃபேர் வாட்ச் மர்மத்தை உடைத்துள்ளார்.  நான் கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரத்தை பெல் அண்ட் ரோஸ் எனும் நிறுவனம் ரஃபேல் விமானத்தை தயாரித்த டசால்ட் ஏவியேஷன் எனும் பிரெஞ்சு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ளது. 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து?

ரஃபேர் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். உலகத்தில் மொத்தமாகவே 500 வாட்சுகள் தான் உள்ளன. இந்த மாடல் வாட்ச் இந்தியாவிலேயே மொத்தமாக இரண்டு தான் விற்கப்பட்டுள்ளன. ஒன்று நான் பயன்படுத்தும் நிலையில், மற்றொன்றை மும்பையில் ஒரு பெரு நிறுவனத்தில் பணியாற்றும் நபர் பயன்படுத்தி வருகிறார். 

இந்த வாட்சை நீங்கள் சாதாரணமாகக் கட்ட முடியாது. ஒரு செங்கல் போல இந்த வாட்ச் கனமாக இருக்கும். நான் இந்த வாட்சை 2021ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் ரூ.3 லட்சத்திற்கு  ரபேல் வாட்சை நான் வாங்கினேன். இந்த வாட்சை யாரும் இனிமேல் வாங்க முடியாது. ஏனென்றால் இந்த வாட்ச் மார்க்கெட்டில் இல்லை என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  எந்த காலத்திலும் கட்சி வளராது.. பணம் இருப்பவர்களுக்கே பொறுப்பு.. அண்ணாமலை மீது பகீர் புகார் கூறிவிட்டு விலகல்

பெங்களூரு காவல்துறையில் பணியாற்றியபோது, லஞ்ச பணத்தில் வாங்கியது என கூறுவது எல்லாம் உண்மை அல்ல. இதுதொடர்பாக சிலர் போலியான ரசிதுகளை பகிர்ந்து வருகின்றனர். எனது வங்கிக் கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்து விவரங்களையும் வெளியிடுகிறேன். வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் தருகிறார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். 

click me!