ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டு செல்வது கட்சிக்கு செய்யும் துரோகம்.. கதறும் கேப்டன் விஜயகாந்த்.

By Ezhilarasan BabuFirst Published Oct 25, 2021, 12:13 PM IST
Highlights

எந்த சுயநலமும் இல்லாமல் மக்கள் நலன்கருதி, நம்முடைய கழகம் ரசிகர்கள் மன்றமாக இருந்து, பின்னாளில் கழகமாக உருவாவதற்கும், எனக்கும் உறுதுணையாக இருந்தவர்கள் நீங்கள்தான். 

ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டு செல்வது கட்சிக்கு செய்யும் துரோகம் என கட்சியின் நிறுவனத் தலைவரும் தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிகவை விட்டு பலர் வெளியேறி வரும் நிலையில் அவர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:-  100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது, கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும்  நம்ப வேண்டாம். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே உயர்ந்த நோக்கத்தோடும், லட்சியத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட கழகம் தேமுதிக என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 

எந்த சுயநலமும் இல்லாமல் மக்கள் நலன்கருதி, நம்முடைய கழகம் ரசிகர்கள் மன்றமாக இருந்து, பின்னாளில் கழகமாக உருவாவதற்கும், எனக்கும் உறுதுணையாக இருந்தவர்கள் நீங்கள்தான். மேலும் உங்கள் அத்தனை பேரின் விருப்பத்தையும், வேண்டுதலை ஏற்று இரண்டாயிரத்தில் நமது ரசிகர்கள் மன்றத்திற்காக கொடியை அறிமுகப்படுத்தி, 2005இல் அதையே அரசியல் கட்சியாக மாற்ற வேண்டுமென்ற உங்கள் அனைவரின் விருப்பத்திற்கிணங்க உலகமே வியக்கும் அளவுக்கு பிரம்மாண்ட மாநாடுகளையும், கூட்டங்களையும் நடத்தி நாம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை உருவாக்கினோம்.

இதையும் படியுங்கள்: மது பிரியர்களுக்கு பயங்கர அதிர்ச்சி. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.?? அமைச்சர் அதிரடி அறிவிப்பு

அனைவரும் கஷ்டப்பட்டு வளர்த்த நமது கட்சியை இன்றைக்கு யாரோ ஒரு சிலர் மூளைச்சலவை செய்பவர்களின் பேச்சை நம்பியும், ஆசை வார்த்தைகளைக் கூறி மோசம் செய்யும் கயவர்களை நம்பியும், கழகத்தை விட்டு நீங்கள் செல்வது எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கழகத்திற்கும் செய்யும் துரோகமாக கருதுகிறேன். மேலும் மாற்று அணியினர் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி அவர்களுடன் நீங்கள் செல்லும்போது அது உங்களை பலவீனமானவராக இருப்பதை காட்டுவதாகவும். இதை எண்ணும்போது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணரும் நாள் விரைவில் வரும்.

இதையும் படியுங்கள்: நான் தொகுதியில் மட்டும் அரசியல் செய்பவன் அல்ல.. அண்ணாமலையை ஓங்கி அடித்த அமைச்சர் சேகர் பாபு.

எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டு இருப்பது உண்மைதான், அதற்காக தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம். 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது, நமது கழகம் நிச்சயம் தமிழகத்தில் வேரூன்றி இருக்கும் நமது கழகம் வளர்ச்சிப் பாதை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம், மேலும் மூளைச்சலவை செய்பவர்களை அடையாளம் கண்டு தலைமைக் கழகத்திற்கு தெரிவியுங்கள், இனிவரும் காலங்களில் வளர்ச்சி பாதையை நோக்கி நமது கழகத்தை வலிமை மிக்கதாக கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்து கொண்டு செல்வோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!