நான் தொகுதியில் மட்டும் அரசியல் செய்பவன் அல்ல.. அண்ணாமலையை ஓங்கி அடித்த அமைச்சர் சேகர் பாபு.

By Ezhilarasan BabuFirst Published Oct 25, 2021, 11:40 AM IST
Highlights

நான் தொகுதி அரசியல் மட்டும் செய்யவில்லை, தமிழகத்தில் இதுவரை 130-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்துள்ளேன் என அவர் பதிலளித்துள்ளார்

நான் தொகுதி அரசியல் மட்டும் செய்யவில்லை என்றும், தமிழகத்தில் இதுவரை 130-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளேன் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொகுதி பக்கம் மட்டும் சுற்றி வருகிறார் என அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில் சேகர்பாபு இவ்வாறு கூறியுள்ளார். திமுக எதிர்க்கட்சியான இருந்தது முதலே பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையேயான பனிப்போர் இந்த வருகிறது. அதிலும் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல், குறிப்பாக அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் திமுகவுக்கும் தமிழக பாஜகவுக்குமான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

இதையும் படியுங்கள்: ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டு செல்வது கட்சிக்கு செய்யும் துரோகம்.. கதறும் கேப்டன் விஜயகாந்த்.

அந்த வரிசையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து திமுக அரசையும், திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு நலிவடைந்த நிறுவனத்தை கைப்பற்றி அதன் மூலம் சுமார் 4000 முதல் 5000 கோடி ரூபாய் மதிப்பில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு மறைமுக ஏற்பாடு நடைபெற்று வருகிறது என புகார் கூறினார். அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதாரங்களை வெளியிட வேண்டுமென அண்ணாமலைக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அண்ணாமலை இதுவரை எந்தவித ஆதாரங்களையும் வெளியிடவில்லை, இதனால் அண்ணாமலையை செந்தில்பாலாஜி மிககடுமையாக விமர்சித்து எச்சரித்துள்ளார். இந்த மோதல் முடிவதற்குள், தற்போது அண்ணாமலை  இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவை விமர்சித்துள்ளார். குறிப்பாக அமைச்சர் சேகர் பாபு தொகுதி பக்கம் மட்டும் சுற்றி வருகிறார் என்றும் கூறி இருந்தார். இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமைக்கப்பட்ட உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு அறையை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு, 

இதையும் படியுங்கள்: அதிமுக படுதோல்வி எதிரொலி.. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமான அதிமுக முக்கிய புள்ளிகள்.

அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நான் தொகுதியின் பக்கம் மட்டும் வலம் வருவதாக கூறியிருக்கிறார், நான் தொகுதி அரசியல் மட்டும் செய்யவில்லை, தமிழகத்தில் இதுவரை 130-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்துள்ளேன் என அவர் பதிலளித்துள்ளார். இப்போது  நான் ஆய்வு மேற்கொண்டுளள்ள இந்தக் கோயில் கூட எனது தொகுதியான துறைமுகத்தை சார்ந்தது அல்ல, திமுக மீது குற்றம்சாட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பாஜக அண்ணாமலை செயல்படுகிறார் என அவர் விமர்சித்தார். அதேபோல இந்து அறநிலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில், வெளிப்படைத் தன்மையோடு, வேண்டியவர் வேண்டாதவர் என பார்க்காமல் திறமை அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

அடுத்த மூன்று கல்லூரி பேராசிரியர்களும் விரைவில் நீயமிக்கப்பட உள்ளனர் என்றார் .2017 ஆம் ஆண்டு சிலைகளை பாதுகாக்க 8 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது, 3 ஆயிரத்து 87 கோயில்களில் திருமேனிகள் பாதுகாப்பு அறைகளை அமைக்க அரசாணை வெளியிடப் பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டு பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,085  பாதுகாப்பு அறைகள் விரைவில் அமைக்கப்படும் என அவர் கூறினார். அதேபோல விரைவில் கோயில்களை சுற்றியுள்ள மதுபான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

click me!