உண்மையான தமிழனா இருந்தா இந்து மதத்தை விட்டு வெளியேறு... ஆ.ராசா அறைகூவல்..!

By Thiraviaraj RMFirst Published Dec 7, 2021, 5:40 PM IST
Highlights

உண்மையான தமிழனா இருந்தா இந்து மதத்தை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.,யுமான ஆ.ராசா கூறியுள்ளார்.
 

உண்மையான தமிழனா இருந்தா இந்து மதத்தை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.,யுமான ஆ.ராசா கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் பேசுகையில், ’’சிவன் தலையில நிலா இருக்கு. அது ஆன்மீகம். எங்கப்பா சொன்னாரு எனக்கு. எங்கப்பாவுக்கு எங்க தாத்தா சொன்னாரு. எங்க தாத்தாவுக்கு பூட்டன் சொன்னாரு. சிவன் தலையில நிலா இருக்குன்னு சொன்னாங்க. 1967ல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் போய் இடது காலை எடுத்து வைச்சிட்டார். இந்த இடது காலை ஆம்ஸ்ட்ராங் சிவன் தலையிலாயா எடுத்து வைச்சார். நம்பிக்கை என்பது வேறு. அறிவியல் என்பது வேறு

.

ராஜா அப்படி சொல்ல வேண்டாம் முஸ்லிம் ஓட சிம்பிளே ஹாஃப் மூன் தான், நான் அவங்க கொடி ல பார்த்து இருக்கேன். அதுல போய் ஆம்ஸ்ட்ராங் கால் வச்சுட்டாரு சொல்லுங்க பார்ப்போம்? இந்து என்ற மதமே இவ்வுலகில் இல்லை. உண்மையான தமிழனாக இருந்தால் இந்து மதத்தை விட்டு உடனடியாக வெளியேறுங்கள். உங்களை சூத்திரன் என்றும், சண்டாளர் என்றும் சொல்லும் ஒரு மதத்திற்கு ஒத்துப்போகாதீர்கள்.  

அந்த மதம் ஒழியாதவரை உங்களுக்கு மேன்மை இல்லை. இன்றைக்கு இந்தியாவிற்கு அடிக்கப்பட்டு இருக்கிற காவி வண்ணத்தால், ஒரு ஆபத்து சூழ்ந்துள்ளது. இந்த ஆபத்தை தடுக்க கூடிய ஒரே மருந்து பெரியார்தான். இதை நாம் இந்தியாவிற்கு சொல்ல வேண்டிய கடமை உள்ளது. அம்பேத்கரை சொல்லலாம் ஆனால் இந்துத்துவாவின் அம்பேத்கர் என்றே அவர்கள் புத்தகம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அம்பேத்கரை அவர்களின் கிரகித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால் பெரியார் அப்படி அவர்களால் நெருங்கமுடியாது. நெருப்பை காகிதத்தில் பொட்டலம் கட்ட முடியாது அல்லவா அப்படித்தான் பெரியார் உள்ளார். அம்பேத்கர் ஏன் இஸ்லாத்துக்கு போகவில்லை.. ஏன் கிறித்துவதற்கு போகவில்லை? இந்த நாட்டில் தோன்றிய ஒரு மதமான இந்து மதத்திற்கு நெருக்கமாக உள்ள பௌத்தத்தைதான் அவன் தழுவினார் என்கிற அளவிற்கு அவர் பேசுகிறார்கள்.

 

சிறந்த நிர்வாக நடவடிக்கைகளின் மூலமாக முதல்வர் ஸ்டாலினை, ஒரு தத்துவத் தலைவராக நான் பார்க்கிறேன். வரும் லோக்சபா தேர்தலில் அவரை நாட்டின் தலைசிறந்த தலைவராக உருவாக்குவோம்'’ என அவர் பேசியுள்ளார். 

click me!