தாய்மொழியுடன் ஆங்கிலம், இந்தியையும் கற்க வேண்டும்.. ஆந்திரா அமைச்சர் ரோஜா அதிரடி கருத்து.!

Published : Apr 17, 2022, 10:08 PM IST
தாய்மொழியுடன் ஆங்கிலம், இந்தியையும் கற்க வேண்டும்.. ஆந்திரா அமைச்சர் ரோஜா அதிரடி கருத்து.!

சுருக்கம்

நமது பிள்ளைகள் தாய்மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை கற்றால்தான், உலகளவில் அவர்கள் தங்களது ஆளுமைகளை வெளிப்படுத்த முடியும். 

தாய் மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை கற்க வேண்டும் என ஆந்திரா மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் ரோஜா

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் இடம் பெற்ற நடிகை ரோஜா, தமிழகத்துக்கு வருகை தந்தார். முதலில் காஞ்சிபுரம் காமாட்சிக்கு கோயிலுக்கு சென்ற அவர், பின்னர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ரோஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா பெருந்தொற்று காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக சுவாமி தரிசனம் செய்ய வர முடிய வில்லை. இப்போதுதான் வருவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு எப்போது நெருக்கடிகள் ஏற்பட்டாலும், அண்ணாமலையாரை வேண்டிக் கொள்வேன். 

வேண்டுதல் நிறைவேறியது

ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு அண்ணாமலையாரை சுற்றி கிரிவலம் வந்தேன். இப்போது அமைச்சராக வேண்டும் என வேண்டிக்கொண்டேன். என்னுடைய வேண்டுதல் நிறைவேறி விட்டது. அமைச்சராக பொறுப்பேற்றதும் அண்ணாமலையாரை தரிசனம் செய்து வேண்டுதலை நிவர்த்தி செய்திருக்கிறேன். தமிழகம் மற்றும் ஆந்திரா மாநில முதல்வர்கள் தோழமை உணர்வோடு இருக்கிறார்கள். இதனால், தமிழகத்தையொட்டி உள்ள என்னுடைய தொகுதிக்கு பல்வேறு உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு பெற்றுள்னேன்.  நான் சிறப்பாகப் பணியாற்றி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு நற்பெயரை பெற்று தருவேன். 

இந்தி மொழியைக் கற்கணும்

உலகளவில் நம்முடைய ஆளுமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றால் தாய் மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளையும் நாம் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும். ஆந்திராவில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழியும் கற்பிக்கப்படுகிறது. எந்த ஒரு மொழியையும் யார் மீதும் யாரும் திணிக்க முடியாது. நமது பிள்ளைகள் தாய்மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை கற்றால்தான், உலகளவில் அவர்கள் தங்களது ஆளுமைகளை வெளிப்படுத்த முடியும். எதையும் தவறான நோக்கத்துடன் பார்த்தால் தவறாகத்தான் தெரியும். நல்ல நோக்கத்துடன் பார்த்தால் நன்றாக இருக்கும்” என்று ரோஜா தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!