OPS- OPR case: பாய்ந்தது ஓ.பி.எஸ், அவரது மகன் ஓ.பி.ஆர் மீது வழக்கு... இதுதான் பின்னணியா..?

Published : Jan 10, 2022, 10:46 AM IST
OPS- OPR case: பாய்ந்தது ஓ.பி.எஸ், அவரது மகன் ஓ.பி.ஆர் மீது வழக்கு... இதுதான் பின்னணியா..?

சுருக்கம்

2019 தேர்தலின்போது ரவீந்திரநாத் எம்பி. தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் கூடிய பிரமாண பத்திரத்தில் அவர், தனது சொத்து உள்ளிட்ட விவரங்களைத் தவறாக வெளியிட்டுள்ளார்.

வேட்பு மனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்துக்கு எதிராகத் தேனி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், காட்டுநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் பொறியாளரான மிலானி. இவர், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக கடந்த 2018 வரை இருந்தவர். இந்நிலையில் இவர் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி தனித் தனியாக இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார்.

இதையும் படியுங்கள் :- அத்தியாவசிய சேவைக்கு தடை... ஒயின் ஷாப்புக்கு தடை இல்லையா...? தமிழக அரசை 'அட்டாக்' செய்த ராமதாஸ் !!

அதில், தேனி தொகுதி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே தங்களது வேட்பு மனுவில் சொத்து விபரங்களை மறைத்து தவறான தகவல்களை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதில், 2019 தேர்தலின்போது ரவீந்திரநாத் எம்பி. தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் கூடிய பிரமாண பத்திரத்தில் அவர், தனது சொத்து உள்ளிட்ட விவரங்களைத் தவறாக வெளியிட்டுள்ளார்.

அதுபோன்று 2021 தேர்தலுக்குத் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஓ.பன்னீர் செல்வமும் சொத்து குறித்த விவரங்களை தவறாக குறிப்பிட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த தேர்தல் அறிக்கையில் வங்கியில் கடனாக வாங்கப்பட்ட பண கணக்குகளும், தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளும் மற்ற விவரங்களும் தவறாக உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள் :-  தகதகனு மின்னும் தம்மாதூண்டு உடையில்... கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ஜான்வி கபூர்

இந்த வழக்கில் தேனி நடுவர் குற்றவியல் நீதிமன்றம் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவும், விசாரணை அறிக்கையைப் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ரவீந்திரநாத் மீது தேனி மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார், இபிகோ 156(3) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து ஐடி ரெய்டு, அமலாக்கத்துறை சோதனை, மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் :- ஒமிக்ரானை தொடர்ந்து.. வந்த 'டெல்டா - கிரான்'... மறுபடியும் முதல்ல இருந்தா... பீதி கிளப்பும் புது வைரஸ்

18 நாட்கள் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாயை மோசடி செய்ததாக கர்நாடக மாநிலம் ஹசன் என்கிற ஊரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்ட மன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பி,எஸ், தேனி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஓ.பி.ஆர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள் :- பிரதமரை கொல்வதற்கு சதி திட்டம் என்பது அப்பட்டமான அரசியல் நாடகம்.. உண்மையை தோலுரிக்கும் KS.அழகிரி.!

PREV
click me!

Recommended Stories

அந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?
ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!