
சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் நடிகர் ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது, அவர் அரசியலில் களம் இறங்குவதாக அறிவித்தார். இதற்கு அனைத்து தரப்பு கட்சியினரும்ஆதரவு தெரிவித்து வரவேற்றனர்.
குறிப்பாக பாஜகவினர், ரஜினியை தங்களது கட்சியில் இணையும்படி வற்புறுத்தி வருவதாக தெரிகிறது. இதனை சில தலைவர்கள் மறுத்தாலும், சிலர் வெளிப்படையாகவே வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில், கல்லூரி மாணவர்களுடன் களம் இறங்கிய நடிகர் லாரன்ஸ், அரசியலில் வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது. நடிகர் லாரன்ஸ், ரஜினியின் தீவிர ரசிகர். அவரை தனது குருநாதன் என்றே கூறுவார். அவரது பெரும்பாலான படங்களில் ரஜினி ஸ்டைலையே செய்து வருவார்.
இந்நிலையில், ரஜினி புதிய கட்சி தொடங்குவதால், அதில் லாரன்ஸ் இணைவார் என பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தாலும், சென்னை நகரின் முக்கிய தொகுதி அவருக்கு கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும், புதிய தொடங்கும் ரஜினிகாந்த், காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ம் தேதி அறிவிப்பாரா அல்லதுஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் அறிவிப்பாரா என ஆலோசனை நடந்து வருகிறது.
காலா படப்பிடிப்புக்காக மும்பைக்கு செல்லும் முன் ரஜினி, 'அரசியலுக்கு வருவது பற்றி, நேரம் வரும்போது தெரிவிப்பேன்' என, நிருபர்களிடம் கூறினார். அதனால், அவரது அரசியல் பிரவேசம் உறுதியாகிவிட்டது. இதையடுத்து, நடிகர், நடிகையர், ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர்கள் மாதவன், பிரேம்ஜி, நட்ராஜ், நமீதா, மீனா உள்பட பலரும் ரஜினிக்கு ஆதரவு அளித்துள்ளனர். சமீபத்தில், நடிகர் ஆனந்தராஜ், ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது,ரஜினியுடன் இணைந்து பணியாற்ற தயார் என, ஆனந்தராஜ் கூறியதாக தெரிகிறது. ரஜினியும், 'காலா'படப்பிடிப்பு முடிந்ததும், இருவரும் சந்தித்து பேசலாம் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், 'லொள்ளு சபா' ஜீவா ஆகியோரும், ரஜினி கட்சியில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர் என ரசிகர் மன்ற வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.