தமிழக மீனவர்களின் மானசீக ஹீரோ சுஷ்மா சுவராஜ்.....சோகக் கடலில் மூழ்கினர்...

By Muthurama LingamFirst Published Aug 7, 2019, 10:26 AM IST
Highlights


திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமான இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு ஹீரோ போல் தன் வாழ்நாள் முழுக்க இருந்தார் என்று சொல்வது மிகையாகாது. அந்நிய சக்திகளால் மீனவர்கள் சில சமயம் அநியாயமாகக் கொல்லப்பட்டபோது ‘அம்மா சுஷ்மா சுவராஜ் வராமல், அவர் சொல்லாமல் எங்கள் மீனவனின் உடலை வாங்கமாட்டோம்’என்று மீனவர்கள் அவருக்காக, அவரது நீதிக்குரலுக்காகக் காத்திருந்த சந்தர்ப்பங்கள் பல உண்டு.1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது.
 

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமான இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு ஹீரோ போல் தன் வாழ்நாள் முழுக்க இருந்தார் என்று சொல்வது மிகையாகாது. அந்நிய சக்திகளால் மீனவர்கள் சில சமயம் அநியாயமாகக் கொல்லப்பட்டபோது ‘அம்மா சுஷ்மா சுவராஜ் வராமல், அவர் சொல்லாமல் எங்கள் மீனவனின் உடலை வாங்கமாட்டோம்’என்று மீனவர்கள் அவருக்காக, அவரது நீதிக்குரலுக்காகக் காத்திருந்த சந்தர்ப்பங்கள் பல உண்டு.1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது.

அவர் தமிழக மீனவர்கள் மீது எந்த அளவுக்கு நேசம் வைத்திருந்தார் என்பதற்கு, இறப்பதற்கு மூன்று மணி நேரங்கள் முன்பு கூட மீனவர்களுக்கு ஆதரவாகப் போட்ட ட்வீட்டே ஆதாரம்.

தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் நடவடிக்கை எடுப்பது, தாக்குவது என்பது தொடர்கதையான நிகழ்வாக இருந்த நிலையில்  நாடாளுமன்றத்தில் மாநிலங்களவைக் கூடியதும், தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து தமிழக எம்.பி-க்கள் மைத்ரேயன், டி.ராஜா, ரங்கராஜன் ஆகியோர் விவாதத்தை எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், "இலங்கைச் சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளைத் திரும்பப் பெறவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பதால், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்யப்படும் நிகழ்வு குறையும்’என்று தனது ஆதரவுக்கரத்தை நீட்டினார்.

 பின்னர் ஒரு சமயம் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, தமிழக மீனவர்களை அழைத்துக் கொண்டு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து, 29 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், 103 படகுகளை விடுவிக்கவும், தொடர்ந்து நடைபெறும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் என்ன பதில் அளித்தார் என்பது குறித்து கூறிய  திருச்சி சிவா ,...5 கட்டங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்து இருப்பதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். அதன்படி, முதல் கட்டமாக 29 மீனவர்களையும் 103 மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக இலங்கை தூதரிடம் பேசுவதாக என்னிடம் தெரிவித்தார்.அடுத்த கட்டமாக 20 நாட்களுக்குள் கடலோர காவல்படை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் என இந்த பிரச்சினைக்கு தொடர்புடையவர்கள் அடங்கிய கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்தார்.

3-வது கட்டமாக ஒரு மாத காலத்திற்குள் மேலே கூறப்பட்ட கூட்டத்தில் பேசியதன் அடிப்படையில், இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் என இரண்டு தரப்பு மீனவ பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.4-வது கட்டமாக இலங்கை மீன்வளத்துறை மந்திரியை இங்கு (இந்தியா) அழைத்து வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

5-வது கட்டமாக ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வழிவகை செய்வது என்பது இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வாக கருதப்படுகிறது. ஆனால் அந்த திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என கூறப்படுகிறது. அதற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவானாலும் நான் பிரதமரிடம் பேசி அதனை நடைமுறை படுத்துவேன் என்று கூறினார்.
ஆக இந்த பிரச்சினைகளை படிப்படியாக அணுகுவதன் மூலம் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று தமிழக மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். என்னை பொறுத்தவரை பெயரளவுக்கு ஒரு மனுவை பெற்றோம் என்று இல்லாமல் படிப்படியாக பிரச்சினையை விவரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.


ஒருமுறை பஹ்ரைன் நாட்டை சேர்ந்த மீன்பிடி நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவர்கள் 15 பேரும் ஈரான் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக மூன்று படகுகளுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி ஈரான் நாட்டு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.இதுதொடர்பான தகவல் அறிந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கைதான தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதன் பலனாக அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை  சுஷ்மா சுவராஜ் அப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஒருமுறை தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ(22) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவத்தால் மீனவர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். ஆனால் அவரது உடலை வாங்க மறுத்த மீனவர்கள்  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  நேரில் வந்தால் மட்டுமே வாங்குவோம் என்று பிடிவாதம் பிடித்து அவர் வந்த பிறகே உடலை வாங்கினர்.

இப்படி சுஷ்மா தமிழக மீனவர்களுக்காக ஆற்றிய சேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மொத்தத்தில் அவரை தமிழக மீனவர்களின் மான சீக ஹீரோ என்று அழைத்தாலும் அதில் மிகையில்லை.
 

click me!