சுயநலத்திற்காக நாடாளுமன்றத்தையே கலைக்க துணிந்த குடியரசுத் தலைவர்..!! இது என்ன நாட்டுக்கு வந்த புது கொடுமை..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 2, 2020, 1:47 PM IST
Highlights

இத்திருத்தம் அதிபர் கோத்தபாயவுக்கு பலவகைகளில் தடையாக உள்ளது.   இந்நிலையில் மீண்டும் சட்டத் திருத்தம் கொண்டுவர விரும்பும் கோத்தபயா ,  225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தனது கட்சிக்கு இருக்க வேண்டும் என விரும்புகிறார். 

இலங்கை அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் நோக்கில் இலங்கை நாடாளுமன்றத்தை இன்றோ அல்லது நாளையோ அதிபர் ராஜபக்ஷே கலைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது .  பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை குறைத்து  மீண்டும் பழையபடி அதிபருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய கோத்தபயா திட்டமிட்டுள்ளதால்  நாடாளுமன்றத்தை கலைக்க அவர் தீவிரம் காட்டிவருகிறார். இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்ற பின்பு இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் . 

அதனையடுத்து தனது அண்ணன் மஹிந்த ராஜபக்க்ஷவை இடைக்கால பிரதமராக கோத்தபாய ராஜபக்ஷ நியமித்தார்.  முன்னதாக சிறிசேனவும் ,ரணில் விக்கிரமசிங்கவும் ,  அதிபர் மற்றும் பிரதமராக இருந்தபோது அதிபரின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில்  19ஏ திருத்தம் கொண்டுவரப்பட்டது . இத்திருத்தம் அதிபர் கோத்தபாயவுக்கு பலவகைகளில் தடையாக உள்ளது.   இந்நிலையில் மீண்டும் சட்டத் திருத்தம் கொண்டுவர விரும்பும் கோத்தபயா ,  225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தனது கட்சிக்கு இருக்க வேண்டும் என விரும்புகிறார்.  எனவே இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது ,  

முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்காக நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்றோ அல்லது நாளையோ உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .  இதை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .  இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து  தேர்தல் முடியும் வரை மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பு பிரதமராக இருப்பார் .  இந்நிலையல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் என இலங்கை தேர்தல் ஆணையர்  தலைவர் மஹிந்த தேசப்பிரியா தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 

 

click me!