கூட்டணியே வேண்டாம் டாடி, சிங்கிளா களமிறங்குவோம்! செமயா ஜெயிப்போம்.. ஸ்டாலினை உசுப்பேத்தும் உதயநிதி

By Asianet TamilFirst Published Mar 2, 2020, 1:43 PM IST
Highlights

ஸ்டாலினின் ஏகபுதல்வன் உதயநிதியை நினைத்தால்தான் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாயும், வயிறும் வேகிறது.

தம்பி கொஞ்சம் தள்ளிப்போயி வெளாடுங்க!’ என்று சொல்லிவிடலாமா? என்று கூட சிலர் யோசிக்கிறார்கள். ஆனால், ஸ்டாலினுக்கு இணையான செல்வாக்குடன் கழகத்தில் அவர் வலம் வருவதால் தி.மு.க. முக்கியஸ்தர்களே உதய்யிடம் மடங்குகையில், கூட்டணி கட்சிகள் எம்மாத்திரம்?....என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

அப்படி என்னதான் பண்ணிட்டார் உதயநிதி? விளக்குகிரார்கள் விமர்சகர்கள்....”கடந்த நாடாளுமன்ற தேர்தலின் மூலமாகதான் தீவிர அரசியலினுள் களமிறக்கிவிடப்பட்டார் உதயநிதி. தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்தார். அரசியலுக்கு புதிய முகம்! போன்ற தோற்றமெல்லாம் உதய்யிடம் இல்லாதது பெரிய பிளஸ் ஆக இருந்தது. 

அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்ற பெரும் வெற்றியில் உதயநிதியின் ஃப்ரெஷ் பிரசாரத்துக்கும் பெரும் பங்கு உண்டு! என்று உதயநிதியின் நண்பரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மகேஷ் பொய்யாமொழி ஒரு கீரிடத்தை தூக்கி மாட்டிவிட்டார். 
இது உண்மையோ அல்லது இல்லையோ ஆனால் கூட்டணி கட்சி தலைவர்கள் இதற்கு ‘ஆமாம்’ போட வேண்டியிருந்தது. இதற்குப் பிறகு தி.மு.க.வில் உதயநிதியின் உயரம் எட்டாத இடத்துக்கு போயிடுச்சு. 

நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தை சுத்திய வகையில் பல விஷயங்களைக் கணிச்சு வெச்சிருக்கும் உதயநிதி ’ஏன் 2021 சட்டசபை தேர்தல்ல நாம தனித்து போட்டியிடக் கூடாது?’ன்னு தன்னோட இளைஞரணி நிர்வாகிகளிடம் கேட்டுட்டே இருந்தார். ‘சட்டுன்னு இந்த முடிவை எடுக்க வேண்டாம் உதய்’ என்று மகேஷ் பொய்யாமொழி சொன்னார். அதன் விளைவாகதான் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் காங்கிரஸை கழட்டிவிடுவது போலவே உதய் பேசினார், கே.என்.நேருவும் இதுக்கு ஒத்து ஊதினார். 

உதயநிதியின் இந்த போக்கை காங்கிரஸின் சீனியர் தலைவர் திருச்சி வேலுச்சாமி வன்மையாக எதிர்க்க, ஸ்டாலினுக்கு கவலையாகிடுச்சு. விளைவு, இரண்டில் ஒரு தொகுதியை காங்கிரஸுக்கு கொடுத்தாங்க. மிக மோசமான தோல்வியை நாங்குநேரியில் சந்திச்சது காங்கிரஸ். தி.மு.க.வும் விக்கிரவாண்டியில் தோற்றதுதான். ஆனால் அதை பெருசா அவங்க காட்டிக்கலை. 

இதுக்குப் பிறகு காங்கிரஸை கழட்டிவிட்டே தீரணும் எனும் ரேஞ்சுக்கு உதயநிதி போயிட்டார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு குறைவான இடங்களை ஒதுக்கியது, வெற்றி பெற்ற பஞ்சாயத்துகளில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை ஒதுக்காமல் கவிழ்த்தியது, இதை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கேள்வி கேட்டதும், துரைமுருகன் மூலம் ‘ஓட்டு வங்கியே இல்லாத காங்கிரஸ் எங்கள் கூட்டணியை விட்டுப் போனாலும் கவலையே இல்லை எங்களுக்கு’ என்று மிக மோசமாக விமர்சிக்க வைத்தது, இதன் பின் பதறியடிச்சு சமாதானத்துக்கு காங்கிரஸ் தலைவர்களை வரவைத்ததது, இவற்றின் மூலம் தமிழக மக்கள் முன்னிலையில் ‘காங்கிரஸால்  தி.மு.க.வுக்கு எந்த தேர்தல் லாபமும் இல்லை.’ அப்படின்னு புரியவைக்க முயன்றார் உதயநிதி. தன் டார்கெட்டில் ஜெயிக்கவும் செய்தார் அவர். 

இப்படியாக காங்கிரஸை நம்பி தாங்கள் இல்லைன்னு நிரூபிச்ச பிறகு, ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுகள் விடுதலை சிறுத்தைகளை கழற்றிவிட பார்ப்பதும் மிக முக்கியமாக பார்க்கப்படுது. இந்த நிலையில்தான் தன்னோட அப்பாவிடம் ‘தமிழ்நாடு முழுக்க நமக்கு அபரிமிதமான செல்வாக்கு இருக்குது. சி.ஏ.ஏ. விவகாரத்தால் 95% மைனாரிட்டி ஓட்டும் நமக்குதான் கிடைக்குது. அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருக்கும் இஸ்லாமியர்களே அந்தக்கட்சிக்கு ஓட்டுப் போட மாட்டாங்க. அதனால நாம துணிஞ்சு தனியா நிற்போம். கூட்டணியே தேவையில்லை. இவங்களுக்கெல்லம பிரிச்சு பிரிச்சு கொடுத்துட்டு, கடைசியில நம்ம கையில் என்ன இருக்கப்போகுது? நாம உறுதியா ஜெயிக்கும் தொகுதிகளை கூட இவங்களுக்குப் பிரிச்சுக் கொடுக்க வேண்டிய நிலை வரும்! 

அதனால தனியா நிற்போம், மக்கள் ஆதரவில் செம்மயா ஜெயிப்போம். இவங்களையெல்லாம் கூட வெச்சிருந்தால் நாளைக்கு பல தீர்மானங்களை இயற்றும் போது சிக்கலை கொடுப்பாங்க. அதனால சிங்கிள் மெஜாரிட்டியில் நீங்க சிங்கம் மாதிரி உட்காரணும் டாடி! கண்டிப்பா கூட்டணி வேணும்னா கம்யூனிஸ்ட்களை மட்டும் வெச்சுப்போம். அவங்களுக்குதான் ஸ்டேட் முழுக்கவும் எல்லா தொகுதியிலும் ஏதோ ஒரு பர்சன்டேஜ் ஓட்டு இருக்குது.’ அப்படின்னு கன்வின்ஸ் பண்ணிட்டு இருக்கிறார். 
உதய் இப்படி உருட்டும் தகவல் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு போயிடுச்சு. அதனாலதான் செம்ம கடுப்பில் இருக்கிறாங்க உதய் மேலே!” என்று முடிக்கிறார்கள். 
நல்லா வருவீங்க உதய்ணா!

click me!