நில அபகரிப்பு வழக்கு... நீதிமன்றத்திற்கு ஓடோடி வந்த மு.க.அழகிரி..!

By vinoth kumarFirst Published Oct 23, 2019, 12:51 PM IST
Highlights

நில அபகரிப்பு வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று  நேரில் ஆஜராகியுள்ளார்.

நில அபகரிப்பு வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று  நேரில் ஆஜராகியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டையில் தனது மகன் துரை தயாநிதி பெயரில் தயா பொறியியல் கல்லூரியை அழகிரி கட்டியுள்ளார். இந்த கல்லூரிக்காக அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க.அழகிரி, சம்பத், ஆதிலட்சுமி, சேதுராமன், சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. 

இதையும் படிங்க;-   மகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்ற மனைவி... இறுதியாக சென்ற அந்த போன் கால்... ஆண் நண்பர் செய்த பகீர் காரியம்..!

இந்த வழக்கு மீதான விசாரணை மதுரை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, சதீஷ்குமார், ஆதிலட்சுமி, சம்பத்குமார் ஆகிய 4 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், எம்.பி.யாக இருக்கும்போது தனது வேட்பு மனுவில் சொத்துகளைக் கணக்கில் காண்பிக்காத காரணத்திற்காக அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கிலும் இன்று அழகிரி ஆஜரானார்.

அதன்படி, இன்று மாஜிஸ்திரேட்டு ஸ்ரீதேவி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மு.க.அழகிரி உள்ளிட்ட 4 பேரும் நேரில் ஆஜரானார்கள். இதனையடுத்து, இதுதொடர்பான வழக்கை நவம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

click me!