அதிமுகவிற்கு நான் தான்..! பிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் கெத்தாக உட்கார்ந்த ஓபிஎஸ்..!

By Selva KathirFirst Published Jun 20, 2020, 10:48 AM IST
Highlights

அதிமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடியிடம் நேரடியாக பேசியதன் மூலம் கட்சிக்கு அதிகாரப்பூர்வ பிரதிநிதி இன்னமும் தான் தான் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் ஓபிஎஸ்.

அதிமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடியிடம் நேரடியாக பேசியதன் மூலம் கட்சிக்கு அதிகாரப்பூர்வ பிரதிநிதி இன்னமும் தான் தான் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் ஓபிஎஸ்.

சசிகலாவுக்க எதிராக களம் இறங்கி அதிமுகவை உடைத்து பிறகு மீண்டும் இணைந்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆனார் ஓபிஎஸ். இதன் பிறகு துணை முதலமைச்சர் பதவி தான் அவருக்கு கிடைத்தது. இதனால் முதலமைச்சர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிசாமி சொல்வது தான் அதிமுகவில் நடக்கிறது என்கிற ஒரு பேச்சு எழுந்தது. மேலும் கட்சியில் நிர்வாகிகள், தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்விலும் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கியது. மேலும் சசிகலாவுக்கு எதிரான கிளர்ச்சியின் போது ஓபிஎஸ் வசம் இருந்த பலரும் பிறகு ஈபிஎஸ் பின்னால் அணிவகுத்தனர். இதனால் அதிமுகவில் ஓபிஎஸ் அவ்வளவு தான் என்று கூட பேச்சுகள் கிளம்பின.

மேலும் ஒவ்வொரு முறை தனது ஆதரவாளருக்கு கட்சியில் பதவி, தேர்தலில் போட்டியிட சீட் வாங்க ஓபிஎஸ் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்ததாக கூட கூறப்பட்டது. இதனால் அதிமுகவில் இனி எடப்பாடியார் தான் ஓபிஎஸ் டம்மி தான் என்று விமர்சனங்கள முன்வைக்கப்பட்டன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொரோனா காலகட்டத்தில் கூட ஓபிஎஸ் பெரிய அளவில் செய்லபாடுகளை முன்வைக்கவில்லை. ஆனால் ஆட்சி கையில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி பம்பரமாக சுற்றிச் சுழன்றார். அதிமுகவிற்கு எதிரான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்க அமைச்சர்களை களம் இறக்கினார்.

இதனால் அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பது யார் என்பதை சொல்லாமல் சொல்லி வந்தார் எடப்பாடியார். இந்த நிலையில் தான் எல்லையில் சீனா அத்துமீறல் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக சார்பில் இந்த கூட்டத்தில் யார் பங்கேற்கப்போவது என்கிற பேச்சு எழுந்தது. கடந்த முறை கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் அதிமுக சார்பில் தம்பிதுரை பங்கேற்றார்.

அந்த வகையில் இந்த முறையும் தம்பிதுரையே அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அனைத்து கட்சி கூட்டத்தில் தானே பங்கேற்க உள்ளதாக ஓபிஎஸ் கூறிவிட்டார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்கிற வகையில் அனைத்து கட்சி கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொள்வதற்கு யாராலும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. இதனால் எந்தவித தடங்கலும் இன்றி அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று கெத்தாக தனது கருத்தை எடுத்து வைத்தார் ஓபிஎஸ். அதாவது இதுநாள் வரை பிரதமர் மோடி அரசு ரீதியிலான ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.

அதில் முதலமைச்சர் என்கிற முறையில் எடப்பாடியார் கலந்து கொண்டார். ஆனால் கட்சி ரீதியிலான கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்றுள்ளார். மேலும் இதற்கான தகவலையும் கூடஓபிஎஸ் எடப்பாடியிடம் வெளிப்படையாகவே கூறிவிட்டதாக சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் என்பதால் புரோட்டகால் படி தனது பங்கேற்பை கூறிவிட்டே அனைத்து கட்சி கூட்டத்தில் விடியோ கான்பிரன்ஸ் மூலம் இணைந்துள்ளார் ஓபிஎஸ். இதனால் கட்சியில் இன்னும் தனது கடிவாளம் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார் ஓபிஎஸ்.

click me!