சட்டமன்றத்துக்குள் மலரப் போகும் தாமரை... முக்கிய தொகுதிகளை அடித்து தூக்கும் பாஜக...!

By Kanimozhi PannerselvamFirst Published May 2, 2021, 12:11 PM IST
Highlights

அதன் பலனாக தாராபுரம், நெல்லை, உதகை, நாகர்கோவில், துறைமுகம் ஆகிய 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக கூட்டணி கட்சியினர் பல்வேறு தொகுதியில் முன்னிலை பெற்று வந்தனர். தற்போது 4வது சுற்று நிலவரப்படி திமுக கூட்டணி 136 இடங்களிலும், அதிமுக கூட்டணி 97 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 20 இடங்களில் போட்டியிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் பாஜகவினரை அனுப்ப வேண்டும் என்ற தீவிர முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டனர். அதன் பலனாக தாராபுரம், நெல்லை, உதகை, நாகர்கோவில், துறைமுகம் ஆகிய 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித்தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். எல்.முருகன் 15,816 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளார் கயல்விழி 13,624 வாக்குகளைப் பொற்று 1,562 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். 

துறைமுகம் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய வினோஜ் பி செல்வம் 1,532 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். திமுக வேட்பாளரான சேகர் பாபு 1,710 வாக்குகளையும், வினோஜ் பி செல்வம் 3,242 வாக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி 2,348 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். உதகையில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷை விட பாஜக வேட்பாளர் எம்.போஜராஜன் 6,208 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 4,208 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 
 

click me!