அதிமுகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. ராஜபாளையத்தை கோட்டைவிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..?

By Ezhilarasan BabuFirst Published May 2, 2021, 11:27 AM IST
Highlights

அதேபோல திமுகவின் முக்கிய அமைச்சராக கருதப்பட்டவரும், எதையும் துணிச்சலாக வெளிப்படையாக விமர்சிக்கக் கூடிய வருமான அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருக்கிறார்.  

அதிமுகவில் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.டி ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் சுமார் 1,466 வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை  வகித்து வருகிறார். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

 

அதிமுக, திமுகவை எட்டிப் பிடிக்க போராடி வருகிறது, ஆனால் எண்ணிக்கை இடைவெளி அதிகளவில் இருந்து வருகிறது. இதுவரை திமுக 108 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது அதிமுக 87 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்த தேர்தல் முடிவுகளில் பல அதிரடி திருப்பங்களும், அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி வருகிறது. குறிப்பாக அதிமுகவின் முன்னணி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை எதிர்த்துப் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி, வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் பெஞ்சமின், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் போன்றோர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர். 

அதேபோல திமுகவின் முக்கிய அமைச்சராக கருதப்பட்டவரும், எதையும் துணிச்சலாக வெளிப்படையாக விமர்சிக்கக் கூடிய வருமான அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருக்கிறார். அதாவது ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜி 5 ஆயிரத்து 904 வாக்குகளை பெற்று உள்ளார். ஆனால் அவர் எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் 6,560 வாக்குகள் பெற்று சுமார் 1, 466 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதலே, தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி பின்னடைவை சந்தித்து வருகிறார். அவரின் இந்த பின்னடைவு அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!