ஆட்டம் கண்ட அண்ணாமலை.. பாஜக கனவு கோட்டையில் வெடி வைத்த திமுக.

By Ezhilarasan BabuFirst Published May 2, 2021, 12:01 PM IST
Highlights

இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி  தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அதில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதலே அண்ணாமலை ஐபிஎஸ் தொடர்ந்து பின்னிலையில் இருந்து வருகிறார். 

பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாது, இளைஞர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட  அண்ணாமலை ஐபிஎஸ் அரவக்குறிச்சி தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை  சந்தித்து வருகிறார். இது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோ சுமார் 5 ஆயிரத்து 780 வாக்குகள் பெற்று 582 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

தமிழகத்தில் அதிமுக-திமுகவுக்கு இடையே நேரடி போட்டி என்றாலும்கூட தனக்கென தனித்துவத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.  அதேநேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும், தங்கள் கட்சிக்கு என தனிச் செல்வாக்கை உருவாக்க அக்காட்சி வியூகம் வகுத்து வருகிறது.

அந்த அடிப்படையில் சமூகத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கு  மிகுந்த நபர்களை தேடிப்பிடித்து கட்சியில் இணைப்பதுடன், அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டது. தமிழக பாஜகவின் துணைத்தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டதுடன், அரவக்குறிச்சி தொகுதியில் களம் இறக்கியது. அவரும் தமிழகத்தில் பாஜகவுக்கு எழுச்சியை உருவாக்கும் வகையில் அவர் செயல்பட்டுவருகிறார். 

அதேபோல இளைஞர் பட்டாளத்துடன் அண்ணாமலை ஐபிஎஸ்  அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார், அவருக்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவே நேரடியாக தொகுதிக்கு வந்து பிரச்சாரமும் செய்தார். அந்த அளவிற்கு தமிழக பாஜகவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக அண்ணாமலை கருதப்படுகிறார். அதேபோல தேர்தல்  பிரச்சாரத்தின் போதும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை எச்சரிக்கும் வகையில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.  அதேவேளையில், பாஜகவுக்கு சாதகமாக தொகுதியான அடையாளம் காணப்பட்ட அரவக்குறிச்சியில் நிச்சயம் அண்ணாமலை வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு நுழைவார் என்று பாஜக தொண்டர்கள் மத்தியில் அபரிதமான நம்பிக்கை இருந்து வருகிறது. 

இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி  தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அதில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதலே அண்ணாமலை ஐபிஎஸ் தொடர்ந்து பின்னிலையில் இருந்து வருகிறார். காலை 11 மணி நிலவரப்படி அண்ணாமலை ஐபிஎஸ்  5 ஆயிரத்து 198 வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோ 5,780 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். சுமார் 582 வாக்கு வித்தியாசத்தில் அண்ணாமலை பின்தங்கியுள்ளார். தொடர்ந்து அண்ணாமலை திமுகவின் இலக்கை சமன் செய்ய போராடி வருகிறார், அதாவது எடுத்த எடுப்பிலேயே கணிசமான வாக்கு வித்தியாசத்தில் அண்ணாமலை முன்னிலை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அவர் பின்னடைவை சந்தித்து வருவது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

 

click me!