
சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த 16ம் தேதி தொடங்கியது. நிதியமைச்சர் ஜெயகுமார், அறிக்கை வாசித்தார். அதன்பின்னர், 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர், இன்று பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.
இதைதொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில், முன்னாள் உறுப்பினர்கள் மெய்யப்பன், பாலையா, விஸ்வநாதன், செல்லையாவுக்கு அப்போது இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து அதிமுக எம்எல்ஏ குமரகுரு பேச தொடங்கினார். அப்போது, திமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை புகழ்ந்து பேசினார். இதற்கு, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கடந்த 16ம் தேதி பட்ஜெட் கூட்ட தொடரின்போது, அதிமுக பொது செயலாளர் சசிகலாவை பற்றி புகழ்ந்து பேசியபோது, இதேபோல் எதிர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பரபப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.