"எடப்பாடியைக் கண்டு சூலூர் பயப்படாது..!!" - தெறிக்க விட்ட அதிமுக எம்எல்ஏ... திணறும் டி.டி.வி. தினகரன்

First Published Mar 20, 2017, 11:44 AM IST
Highlights
ttv dinakaran vs sulur mla kanagaraj


முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டு பயப்பட மாட்டேன் என்று அதிரடியாக பேட்டி அளித்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜை சமாதானப்படுத்த முடியாமல் அதிமுக தலைமை திணறி வருகிறது...

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த வி.மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி இவர்,  ஜெயலலிதா மறைவினை அடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பன்னீர்செல்வத்திற்கு எதிராக வாக்களித்தவர்...

சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தொகுதியில் இவருக்கு பயங்கர எதிர்ப்பாம். இதனால் வெளிநிகழ்ச்சியில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்த கனகராஜ், தனது தொகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தை கையில் எடுத்து அதிமுக தலைமையை மிரட்டி வருகிறார்.

கல் குவாரி விபத்து 

சூலூர் தொகுதிக்கு உட்பட்ட பச்சாபாளையம் பகுதியில் கல்குவாரி ஒன்று இயங்கி வந்ததது.இங்கு நேற்று முன்தினம் பாறைகள் சரிந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த கனகராஜ், காவல்துறையினர் பணம் பெற்றுக் கொண்டு கொலையை, விபத்து என வழக்குப் பதிவு செய்ததாக தடதட குரலில் பேட்டியளித்தார். 

இத்தோடு சும்மாவிட்டாரா! அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் எடப்பாடி அணியில் இருந்து விலகவும் தயார். அவரும் ஒரு எம்.எல்.ஏ.தானே. எதற்கும் பயப்பட மாட்டேன்.. என்று உச்சாசாயிலில் உரக்கக் கூறினார். 

கனகராஜின் இந்த அதிரடிப் பேட்டியைக் கண்டு அதிர்ந்து போன டிடிவி தினகரன்,  சமாதானத்திற்கு வீட்டு வசதி வாரிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், வீட்டுக்கு அனுப்பிவைத்தாராம்... அவசரப்படாதீங்க, கொஞ்சம் பொறுமையாக இருங்க, எல்லாம் சரியாகிடும் என்று ராதாகிருஷ்ணன் எடுத்துச் சொல்லியும் அதனை கனகராஜ் கண்டு கொள்ளவில்லைாயாம்...

இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரனே கனகராஜை தொலைபேசியில் அழைத்து சமாதானப்படுத்த முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அணி மாறும் முடிவில் அவர் திட்டவட்டமாக இருப்பதால் தினகரனிடம் எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லையாம்..

கல்குவாரிக்கு சீல்

கனகராஜை எப்படியாவது சமாதனப்படுத்த வேண்டும் என்று நினைத்த தலைமை கோவை மாவட்டத்திற்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தாகக் கூறப்படுகிறது.,இதனைத் தொடர்ந்து கல்குவாரியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நீதிவிசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனகராஜின் செயல்பாடுகளைப் பார்த்தால் அமைச்சர்களைக் காட்டிலும், எம்.எல்.ஏ.க்களே அதிமுகவில் தற்போது பலம் பொருந்தியவர்களாக பார்க்கப்படுகின்றனர். 

click me!