
ஆர்கே நகர் தொகுதியில் இடை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக சார்பில் மருதுகணேஷ், தொகுதி முழுவதும் அனைத்து சங்கம், அமைப்பு, கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும், பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
அதேபோல், அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மசூதுனன், தொகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் பொறுப்பாளரை நியமித்து, வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.
ஆனால், அதிமுகவின் சசிகலா அணியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன், இதுவரை வாக்காளர்களை சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், தேர்தலில் போட்டியிடும் அவர், தொகுதி நிர்வாகிகளை சந்தித்து, எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை எனவும் பேசப்படுகிற.
இதேபோல், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை தொடங்கினார். ஆனால், தேர்தலுக்கான எவ்வித பணிகளும் இதுவரை தொடரவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், இடம் பெயர தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், ஆர் கே நகர் தீபா பேரவை நிர்வாகி மனோகரன் தலைமையில் 200க்கு மேற்பட்டோர், ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு தெரிவித்து, தங்களை இணைத்து கொண்டனர். இதனால், தீபாவின் கூடாராம் சிறுக சிறுக காலியாகி கொண்டே போகிறது.