
ஆர்கே நகர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
முன்னள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில், வரும் 12ம் தேதி இடை தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சசிகலா அணியில் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். அணியில் மதுசூதனன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பாஜக சார்பில் கங்கை அமரன், தேமுதிகவில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லோகநாதன், ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்ட இளைஞர்களின் கட்சியான என் தேசம் என் உரிமை சார்பில் ஜெயந்தி சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
குறிப்பாக ஒவ்வொரு தேர்தலிதும் 3 அல்லது 4 முனை போட்டி நிலவும், ஆனால், ஆர்கே நகர் சட்டமன்ற இடை தேர்தலில், 6 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சி சார்பில், ஆர்கே நகர் இடை தேர்தலில், போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பாஜக போட்டியிடும் ஆர்கே நகர் தொகுதியில், இந்து மக்கள் கட்சி போட்யிடுவது, பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி, அனைத்து இந்து அமைப்பு நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.