கே.டி.ராகவனுக்கு என்ன ஆச்சு.. அவரது உடல்நிலை குறித்து வெளியான தகவல்..!

Published : Mar 24, 2023, 06:46 AM IST
கே.டி.ராகவனுக்கு என்ன ஆச்சு.. அவரது உடல்நிலை குறித்து வெளியான தகவல்..!

சுருக்கம்

கடந்த 2021ம் ஆண்டு வரை ஆபாச வீடியோவில் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து அதிரடியாக விலகினார். இதனால், எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தும், வெளியே தலை காட்டம் இருந்து வந்தார்.

பாஜக முன்னாள் நிர்வாகி கே.டி ராகவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்து வந்தவர் கே.டி ராகவன், ஊடக விவாதங்களில் பங்கேற்று, மோடி அரசின் திட்டங்களை எடுத்துக் கூறுவதுடன், பாஜகவின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு வரை ஆபாச வீடியோவில் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து அதிரடியாக விலகினார். இதனால், எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தும், வெளியே தலை காட்டம் இருந்து வந்தார்.

இந்நிலையில், கே.டி.ராகவனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருதய பிரச்சனை காரணமாக  கே.டி ராகவனுக்கு இன்று ஓபன் ஹார்ட் சர்ஜரி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!