மணிப்பூரில் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் இனவெறியால் நிகழ்த்தப்பட்டது எனவும், இதற்கு பிரதமர் மோடி நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
"கக்கன்" வாழ்க்கை வரலாறு
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், ஜோசப் பேபி நடிப்பில், சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான "கக்கன்" வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் பாடல் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைப்பெற்ற விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பாடலை வெளியிட, கக்கனின் மகள் கே. கஸ்தூரிபாய், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர். எஸ். ராஜேஸ்வரி, ஐ.பி.எஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நினைவு பரிசு வழங்கிய முதலமைச்சர்
மேலும், கக்கன் திரைப்பட நடிகர் ஜோசப் பேபி, இசையமைப்பாளர் தேவா, பாடலாசிரியர் ஏகாதசி, இயக்குனர்கள் பிரபு மாணிக்கம், ராகோத் விஜய், படைப்பாக்க இயக்குனர் ஏ.எஸ்.சந்தோஷ் ராமா ஆகியோருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் ஊடகப் பிரிவு மாநில தலைவர் கோபண்ணா, அசன் மெளலானா எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடு மோசமான நிலையில் உள்ளதாகவும், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணபடுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட விவகாரத்தில், பா.ஜ.க ஆட்சி எடுத்த நடவடிக்கை என்ன? உடனடியாக கிடைத்த நீதி என்ன? என கேள்வி எழுப்பினார். மணிப்பூர் சம்பவத்தை காமுகர்கள் செய்த வெறிச்செயல்களை பார்க்கிறோம், ஆனால் இனவெறியில் நிகழ்த்தப்பட்ட சம்பவம், பிரதமர் மோடி இதற்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்