கூட்டணி குழப்பத்தை சரி செய்ய டெல்லி தலைவர்கள் வரவேண்டும் - கிருஷ்ணசாமி அழைப்பு

By Velmurugan s  |  First Published Sep 19, 2023, 3:28 PM IST

தமிழகத்தில் அதிமுக, பாஜக இடையே நிலவும் குழப்பத்தை சரி செய்வதற்கு டெல்லி தலைவர்கள் தமிழகத்திற்கு வரவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.


புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2019ம் ஆண்டு தமிழகத்தில்  அதிமுக தலைமைகளில் வலுவான கூட்டணி உருவானது. அதே போல தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் 25 ஆண்டு நிறைவு சாதனை விழா டெல்லியில் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழலை எதிர்த்து அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது இரண்டு நாட்களாக கூட்டணிக்குள் இருக்கின்ற இரண்டு (பாஜக - அதிமுக)நண்பர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

Latest Videos

undefined

கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் பெற்றுத்தர வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியல்; திருவாரூரில் பரபரப்பு

தமிழக பட்ஜெட்டில் நிறைவேற்றப்படக்கூடிய பல திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்படாமல் கிராமங்களில் சாலைகளை போடவில்லை. ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு சீரடைந்து சந்தி சிரிக்கும் விதமாக இருக்கிறது. மக்கள் விரோத திமுக கட்சியை அகற்ற தேசியத் ஜனநாயகக் கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுகின்ற நேரம் இதுவாகும்.

பணியில் இல்லாத அரசு மருத்துவர்; அஜாக்கிரதையால் பறிபோன ஒன்றரை வயது குழந்தையின் உயிர்

மீண்டும் பிரதமர் மோடியை  3வது  முறையாக பிரதமராக ஆக்க அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் பிரச்சினையை தீர்ப்பதற்கு டெல்லி தலைவர்கள் வந்து பேசி சரி செய்ய வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். பரந்த மனப்பான்மையுடன் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

click me!