அரசியலுக்கு அச்சாரம் போட்ட  கிருஷ்ணப் பிரியா !!  பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்த ஐ.டி.ரெய்டு !!!

First Published Nov 17, 2017, 12:44 PM IST
Highlights
krishnapriya enter in to politics


சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசியின் மகளான கிருஷ்ணப்பிரியா இது வரை யாரென்றே தெரியாத நிலையில் தற்போது ஐ.டி.ரெய்டு மூலம்  பிரபலப்படுத்தியிருக்குறது வருமான வரித்துறை, அதுமட்டுமா அவரது அரசியல் ஆசைக்கும் விள்ளையார் சுழி போட்டுள்ளது என்றே கூறவேண்டும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தை பொறுப்புடன் பார்த்துக் கொண்டவர்தான் சசிகலாவின் அண்ணள் ஜெயராமன். மனைவி இளவரசி, மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ஷகிலா மற்றும் மகன் விவேக்குடன் வசித்து வந்த அவர், ஹைதராபாத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரைவிட்டார்.

இதனால் அந்தக் குடும்பத்தின் மீது ஜெயலலிதா அளவு கடந்த அக்கறை காட்டத் தொடங்கினார். போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளைகளாக வளர்ந்தனர் அந்த குழந்தைகள்.

இன்று அவர்கள் மட்டுமல்ல அவர்களின் சொத்துக்களும், அரசியல் ஆசையுமே  ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. அதற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்துள்ளது வருமான வரித்துறை.

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா தனது கணவரைப் பார்க்க பரோலில் வெளிவரும் வரை கிருஷ்ணப்பிரியா என்றால் யார் என்றே தெரியாது. சென்னையில் போயஸ் கார்டனில் சசிகலாவால் தங்க முடியாது என்ற சூழ்நிலையில் அவர் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்கினார்.

அப்போதுதான் பெரும்பான்மையோருக்கு கிருஷ்ணப்பிரியா குறித்து தெரியவந்ததது. தற்போது வருமான வரித்துறை அவரை மேலும் பிரபலமாக்கியுள்ளது.

அண்மையில் நடந்த இந்த ரெய்டில் வருமான வரித்துறையினரால் அதிகம் குறி வைக்கப்பட்டது இளவரசியின் வாரிசுகள்தான். ஜெயா டி.வி., ஜாஸ் சினிமாஸ் போன்றவற்றை நிர்வகித்து வரும் விவேக், தொண்டு நிறுவனங்களை நடத்திவரும் கிருஷ்ணப்பிரியா, மிடாஸ் மது பான தொழிற்சாலையை நிர்வகித்து வரும் ஷகிலா என அவர்கள் தான் ரெண்டில் கடுமையாக மாட்டிக் கொண்டார்கள்.

தற்போது இவர்கள் வீட்டுக்கும், வருமானவரிதுறை அலுவலகத்துக்கும் மாறி,மாறி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை களேபரத்திலும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்த கிருஷ்ணப்பிரியா,  கெத்தாக நட ந்து     கொள்வதைப்பார்த்தால் அவர் அரசியலில் இறங்கப் போவதைப் போன்றே தோன்றுவதாக விவரம் அறிந்தவர்கள் எண்ணுகின்றனர்.

சிறு குழந்தை முதல் ஜெயலலிதாவிடம்  இவர்கள் பாடம் பயின்றவர்கள் அல்லவா ? பணம், செல்வாக்கு, ஊடகம் என ஒரு அரசியல்வாதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் இவர்களிடம்  இருப்பதால் கிருஷ்ணப்பிரியாவுக்கு அரசியல் ஆசை வந்துவட்டதாகவே அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம், மாமல்லவுரம் பகுதியில் தனது அறக்கட்டளை சார்பில் பொது நலப் பணிகள் என கிருஷ்ணப்பிரியா அவ்வப்போது தனது அரசியல் ஆசையையும் வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது வருமான வரித்துறை ரெய்டு, மீடியா வெளிச்சம் என தனது அரசியல் ஆசைக்கு அச்சாரம்போட்டு வருகிறார் கிருஷ்ணப்பிரியா.

click me!