நீதியை நிலை நாட்டை வேண்டிய முதல்வர், அநீதிக்கு அடங்கி போவது நியாயமல்ல.. திமிர விடாமல் திமுகவை அடிக்கும் பாஜக.!

By vinoth kumar  |  First Published Feb 20, 2023, 1:04 PM IST

அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,  சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, திமுகழகத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் விதத்திலும், லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை வீணாக்கும் வகையிலும் செயல்படும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்! என்று தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


அன்று பிரியாணி கடையில் 10க்கும் மேற்பட்ட குண்டர்கள் சென்றது போல் கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் 10க்கும் மேற்பட்ட குண்டர்கள் சென்று படுகொலை செய்திருக்கிறார்கள். ஆனால், இது வரை கட்சி ரீதியான நடவடிக்கை இல்லை. கண்டனம் இல்லை நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 8ம் தேதி, திமுக  கவுன்சிலர் ஒருவரால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார் ஒரு ராணுவ வீரர். இந்த விவகாரம் அரசியலாகப்படுகிறாதா? என்று விவாதிக்கப்படுகிறது. 28/07/2018 அன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சேலம் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி விற்பனை ஹோட்டலில் திமுக நிர்வாகி யுவராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட குண்டர்கள் உள்ளே நுழைந்து இலவச பிரியாணி கேட்டு சண்டை போட்டு அத்துடன் கேஷியர் முகத்தில் குத்துவிட்டனர். அவருடன் வந்த குண்டர்களும்  கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஓட்டல் ஊழியர்கள் பலரும் காயமடைந்தனர். 

Latest Videos

அதையடுத்து,  02/08/2018 அன்று அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,  சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, திமுகழகத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் விதத்திலும், லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை வீணாக்கும் வகையிலும் செயல்படும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்! என்று தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ராணுவ வீரர் படுகொலை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுவரை  மௌனம் காப்பது ஏன்? பிரியாணி கடையில் 10க்கும் மேற்பட்ட குண்டர்கள் சென்றது போல் தான் இந்த விவகாரத்திலும் 10க்கும் மேற்பட்ட குண்டர்கள் சென்று படுகொலை செய்திருக்கிறார்கள். ஆனால், இது வரை கட்சி ரீதியான நடவடிக்கை இல்லை. கண்டனம் இல்லை. 

பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஆறுதல் கூற அன்று பிரியாணி கடைக்கு நேரடியாக சென்ற அன்றைய எதிர்க்கட்சி தலைவர், இன்றைய முதலமைச்சர் நேரடியாக செல்லாதது ஏன்? தடுத்தது யார்?அதிலும், சமீபத்தில் சேலம் வரை சென்ற முதல்வர் கிருஷ்ணகிரிக்கு சென்று ஆறுதல் தெரிவித்திருக்கலாமே? ஏன் செல்லவில்லை? யார் தடுத்தது? 

தடுத்தது அதிகார ஆணவம்.  அடித்தே கொன்ற நபரிடம் இருந்த ஆளும் கட்சி என்ற அகங்காரம். ஆறுதல் தெரிவிக்காது இருப்பது முதல்வர் பதவியில் இருக்கிறோம் மமதையின் காரணமாக! நேரடியாக செல்லாததற்கு காரணம் அதிகார அலட்சியம். இது முறையல்ல. நல்லதல்ல. வன்முறை என்பது இரு கூர் முனையுள்ள ஆயுதம் என்பதை முதல்வர் உணர்தல் நலம். கட்சி வேறு ஆட்சி வேறு என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். நீதியை நிலை நாட்டை வேண்டிய முதல்வர், அநீதிக்கு அடங்கி போவது நியாயமல்ல என நாராயணன் திருப்பதி ஆவேசமாக கூறியுள்ளார். 

click me!